பக்கம்:வள்ளலாரும் அருட்பாவும்.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7


6. அவர் காலத்தில் வாழ்ந்தவர்கள் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை, யாழ்ப் பாணம் ஆறுமுக நாவலர், காஞ்சிபுரம் சபாபதி முதலியார், அட்டாவதானம் கலியாணசுந்தர முதலியார், மாயூரம் முனிசீப் வேத நாயகம் பிள்ளை, அட்டாவதானம் சபாபதி முதலியார், மகாவித்துவான் தணிகாசல முதலியார் போன்றவர்கள். 7. தோற்றம் துறவியாக, ஞானியாக, புலவராக, கவிஞராக, சொற் பொழிவாளராக, எழுத்தாளராக, நூலாசிரியராக, உரை யாசிரியராக, ஞானாசிரியராக, போதகாசிரியராக, மருத்து வராக, சித்தராகக் காட்சியளித்தவர். - - -- 8. அவர் கண்டவை ஒரு தனிக் கொள்கையை, தனி மார்க்கத்தை, தனிக் கொடியை, தனிச் சபையை, தனி மந்திரத்தை, தனி வழி பாட்டைத் தனிமுறையாகக் கண்டவர். - 9. அவரது தொண்டுகள் திருக்குறள் வகுப்பு, முதியோர் கல்வி, மும்மொழிப் பாடசாலை, கல்வெட்டு ஆராய்ச்சி, 10. செயற்கருஞ் செயல்கள் நாம் எண்ணங்களைக் கோடிக் கணக்கில் எண்ணு கிறோம். திருவள்ளுவரோ, "அடுத்த நிமிடம் உயிர் வாழ்வதை அறியமாட்டார்கள். அவர்கள் எண்ணங்களைக் கோடிக்கு மேல் எண்ணுகிறார்கள்' எனக் கூறுகிறார்.