பக்கம்:வள்ளலார் யார்.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பசிப்பிணி மருத்துவர்

13


சாலையை நிறுவினர். அங்குப் பசியால் வாடிவரும் மக்களேயெல்லாம் மலர்ந்த முகத்துடன் வரவேற்று இன்சுவை உணவையூட்டிப் பசியாற்றினர். சாதி சமய இன வேறுப்ாடின்றி நாள்தோறும் காடிவரும் பசியாளர் யாவராயினும் அவர்க்கு உணவூட்டி மகிழ்வர். - - - -

இங்கனம் ப்சிப்பிணி தீர்க்கும் மருத்துவராக விளங்கிய இராமலிங்க வள்ளல்ார், தமது தருமச்சாலே யில் உண்டு பசியாறிய மக்கட்கு அறவுரை. பகர்ந்தரு ளினர். அறவுரை நிகழ்த்துவதற்கென்றே சமரசவேத பாடசாலே யொன்றையும் அங்கே நிறுவினர். அறவுரை கேட்ட அடியவரெல்லாம் அருட்பெருஞ் ே ஆண்டவனே ஒன்றியிருந்து கண்டு மகிழ்தற்குச் ய ஞான சபையை அமைத்தருளினர். அருள் ஒளியின் வடிவர்கத் திகழும் கடவுளைத் தனிப்பெருங் கருணை நெறியால்தான் அடைய முடியும் என்று அறவுரை அருளினர். அருட்பெருஞ்சோதி-தனிப் பெருங்கருணை என்ற அருள் மந்திரத்தை எல்லோரும் உணருமாறும், உணர்ந்து ஒதுமாறும், அதன்வழி நிற்குமாறும் வற்புறுத்திவானகம் புகுந்தார். பசிப்பிணி தீர்க்கும் மருத்துவராய் விளங்கிய வள்ளலார், பிறவிப் பிணி திர்க்கும் மருந்து யாதெனக் காட்டி மறைக் தருளினர். -

நல்ல மருந்(து)இம் மருந்து-அன்பர் நாடும் வைத்திய நாத மருந்து

என்பது அவரது அருள்மொழியன்ருே :

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வள்ளலார்_யார்.pdf/15&oldid=991883" இலிருந்து மீள்விக்கப்பட்டது