பக்கம்:வள்ளலார் யார்.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



௩. தித்திக்கும் தெள்ளமுது


அமிழ்தம் மிகவும் இனியதொரு பொருள் என்று நூல்கள் வாயிலாக அறிந்துள்ளோம். அத்னை உண்டு சுவை கண்டவர் உலகில் எவருமிலர். 'தெள்ளமுதம் உண்டறிவார் தேவரே என்று உரைத்தார் ஆலங்குடி வங்களுர். அது மூவாமைக்கும் சாவாமைக்கும் காரணமான தேவா.முதம் என்று கூறுவதுண்டு. அதனே இந்திரர் அமிழ்தம்’ என்றே செந்தமிழ் வல்ல செழியனுகிய இளம்பெருவழுதி இயம்பினன்.

விருந்தோம்பலப் பற்றி விளக்கவந்த திருவள்ளு வரும் அதனைச் சாவா மருந்து' என்று வலியுறுத் தினர்.

விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா

மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று' என்பது அவர் வாய்மொழியாகும். இறப்பினை நீக்கும் சிறப்பான தேவாமுதமாயினும் விருத்தினர்க் கும் கொடுத்தே அருந்த வேண்டும் என்று அறிவுறுத் தினர் அப் பொய்யில்புலவர். இன்சொல்லும் தன் பால் இருக்க வன்சொல்லே வழங்குவது, கனி இருக் கவும் காயினே உண்டதற்கு ஒப்பாகும் என்பர் அவ்ஓப்பில் புலவர். கனி என்பதற்கு விளக்கம் கொடுத்த உரையாசிரியராகிய பரிமேலழகர் ஒளவை யுண்ட நெல்லிக் கனி போல அமிழ்தாவனவற்ாை? என்று குறித்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வள்ளலார்_யார்.pdf/16&oldid=991828" இலிருந்து மீள்விக்கப்பட்டது