பக்கம்:வள்ளலார் யார்.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24

வள்ளலார் யார்?


உண்டு கணிக்கும் களிவண்டை ஒக்குமே எம்பெரு மாட்டி விழி' என்பது அத் தெய்வக் கவிஞர் தேன்மொழி.

இங்ஙனம் மணிவாசகர், காவுக்கரசர், குமரகுரு பரர் போன்ற கல்லடியார்க்கு ஆனந்தத் தேய்ைத் தித் தித்த ஆண்டவன், அருட்பிரகாசராகிய வள்ளலார் பெருமானுடைய உள்ளத்திற்கு எப்படி இருந்திருப் பான்! அருளே உருவாக விளங்கிய அவர் அவ்ஆனந்தத் தேனே எப்படிப் பருகியிருப்பார்!

ஐந்து மாதக் குழந்தையாக இருக்கும் போதே பொன்னம்பலக் கூத்தன் பொற்புடைய திருக்கோலம் கண்டு புன்முறுவல் பூத்த பெருமானல்லவா கம் அருள் வள்ளலார் அன்றே அவர் உள்ளம் குடிகொண்ட அம் பலத்தரசன் ஆரமுதாய் என்றும் அவர்க்குத் தித்தித் தான். ஆனந்தத் தேய்ை என்றும் அவர்க்கு இன் பத்தை அள்ளியள்ளி வழங்கினன். அந்த அருள் இன்பப் பெருங்கடலுள் மூழ்கித் திளைத்த இராமலிங்க அடிகளார் கைகொட்டிக் கால்பெயர்த்து ஆனந் தக் கூத்தாடத் தொடங்கினர். ஆடினர் பாடினர்! ஆடிக்கொண்டே பாடினர்!

  • அம்பலத் தரசே அருமருந்தே !

ஆனந்தத் தேனே அருள்விருந்தே ! பொதுகடத் தரசே! புண்ணியனே ! புலவ ரெலாம்புகழ் கண்ணியனே! பாட்டைப் பாடிப் பாருங்கள்? நாமும் நம்மை அறியா மல் ஆடத் தொடங்கி விடுவோம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வள்ளலார்_யார்.pdf/26&oldid=991833" இலிருந்து மீள்விக்கப்பட்டது