பக்கம்:வள்ளலார் யார்.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நால்வர் செய்த நற்றமிழ்

27


தமிழைத் துணையாகக் கொண்டு, இணையிலாச் சிவ வெறியைப் பரப்பிய சிறப்புடையராவர். இத்தகைய தேவார இசைக் குழுே தெருவில் பண் னிசைத்து வருமாயின் எண்ணில்லாத மக்கள் திரண்டு கின்று காண்பதும் கேட்பதும் கருத்தைச் செலுத்து வதும் இயற்கையன்ருே !

சுந்தரர் தோன்றிய காலத்திலும் தமிழகத்தில் சமண் நெறி பரவத் தலைப்பட்டது. முள் மரத்தை இளேதாக இருக்கும்போதே கிள்ளியெறிதல் போன்று அத் தீநெறி தல்ேதுக்காதவாறு தடுத்து கிறுத்துதற் கென்றே சுந்தரர் தோன்றியருளினர்.

மாதவம் செய்த தென்றிசை வாழவும்

தீதிலாத் திருத்தொண்டத் தொகைதரவும்' பிறந்தருளிய பெருமாளுர் வைதிகத் திருவும் மன் னவர் திருவும் பொங்கச் சிறந்து விளங்கினர். முன்னே கல்வினையால் இன்னருள் ஈசனேயே சிறந்த நேசனுகப் பெற்றுத் தம்பிரான் தோழரெனத் தலைசிறந்து விளங் கினர். அவரும் பற்பல அற்புதங்களே இறையருள் துணையால் இயற்றிச் சிவநெறியை கிலேநாட்டினர். இம்மூவர் முதலிகளும் பாடிய தேவாரப் பதிகங்களே 'மூவர் தமிழ் என்று போற்றப் பெறுவனவாகும்.

பாண்டிய மன்னனுக்கு மதியமைச்சராய் விளங்கித் திருவருள் ஞானநெறி நின்ற மாணிக்கவாசகர் விலே மதிக்க முடியாத மாணிக்கம் போன்ற மானுற்ற பாக்கள் ஆயிரத்தைப் பாடியருளினர். தேனூறு வாசகங்கள் அறுநூறும், திருக்கோவை நானுாறும் தக் தருளிய நாயகராகிய மணிமொழியாரின் கனிமொழி யனைத்தும் சைவ சித்தாந்த சாரமான தேகைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வள்ளலார்_யார்.pdf/29&oldid=991875" இலிருந்து மீள்விக்கப்பட்டது