பக்கம்:வள்ளலார் யார்.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40

வள்ளலார் யார்?


'சன்ற பொழுதில் பெரிதுவக்கும் தன்மகனேச் சான்றேன் எனக்கேட்ட தாய்' -

என்ற ஈரடிப் பாவால் சீருற விளக்கியருளினர்.

தாய் ஒருத்தி, தான் பெற்ற பிள்ளையைப் பதினறு நான் வரையிலும் பக்கம் விட்டகலாது மிக்க கருத்து டன் பேனுகிருள். அதன் பின்னர், அதனைத் தொட்டி லிலிட்டு உறங்கச் செய்து, சிறிது பொழுதுக்கு ஒரு முறை மறவாது பாலூட்டித் தாலாட்டி வளர்க்கிருள். குழந்தை வளர வளரத் தாய் சிறிது சிறிதாக அதிக நேரம் அதனைப் பிரிந்தும் பொருந்தியும் பேணி வருகி ருள். ஐந்து வயதுப் பையனுகிக் கலை பயிலுதற்குப் பள்ளி செல்லும் காளில், அவன் பள்ளியினின்று திரும் பும்வரை ஓரளவு நீண்ட நேரம் பிரிந்து நிற்கிருள். அவன் வரும் நேரத்தில் அவனது பசியாற்ற உணவு சமைத்துக் கொண்டு, வழிமேல் விழிவைத்து வீட்டு வாயிலில் எதிர் நோக்கி கிற்கிருள். இன்னும் வயது ஏற ஏற அவனே நீண்ட பொழுது பிரிந்திருந்து, பின் னர்க் கண்டு களிக்கிருள். அவன் தக்க பருவமடைந்து வேற்றுார் சென்று கலே பயிலத் தொடங்குவானல்ை அவனைப் பல திங்கள் வரையிலும், பல ஆண்டுகள் வரையிலுங்கூடப் பிரிந்து விடுகிருள். எவ்வளவு காலம் அந்த மகனைப் பிரிந்தாலும் அவனேப் பற்றிய எண் ணம் அத் தாயின் உள்ளத்தில் என்றும் இருந்து கொண்டே இருக்கும்.

இத்தகைய ஒப்பில்லாத பேரன்புடைய தாய், பிள் ளேயைப் பிரிய நேர்கிறது. ஆளுல் இறைவனே உல கத்து உயிர்களாகிய அவன் பிள்ளைகளே அணுவளவு நேரமும் பிரிந்து இருந்ததேயில்லே. அவ் உயிர்கள் செல் லும் இடமெல்லாம் உடனேயே தொடர்ந்து, விடாது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வள்ளலார்_யார்.pdf/42&oldid=991841" இலிருந்து மீள்விக்கப்பட்டது