பக்கம்:வள்ளலார் யார்.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணியில் பட்ட கலமான் 43

மனிதர் கையில் அகப்பட்டதும் மருண்டு உழன்ற மான், பின்பு ஆதரவு பெரிதும் கிடைத்தவுடன், தன்னே வளர்க்கும் தலைவனுடன் குலவி விளையாடத் தொடங்கி விடும். அஃது இனத்தைவிட்டுப் பிரிந்தாலும் மனத் திற்கு ஒரு வகை மகிழ்ச்சியே பெற்று விளையாடுகின் றது. அதிலும், மங்கையர் ஆதரவில் வளரும் மானுக் குப் பொங்கும் மகிழ்ச்சியே. ஆல்ை, வேட்டுவர் கண் ளிையில் விழுந்த மான் அழிந்தே திரும். அதற்கு உய் தியே இல்லை.

மலைச்சாரலில் மான் வேட்டைக்குச் சென்ற இளங்காளேயர் மானனய மாதரார் கண்ணியில் விழுந்து மயங்குவதுமுண்டு. அம் மான்விழி மங்கை யிடமே சென்று, இங்கொரு மான் வந்ததுண்டோ ?” என்று கேட்டு மறுமொழி வேட்டு மதிமயங்கி மெய்ம் மறந்து நிற்பர். அங்கு அம் மானின் கண்வலையிலும் காதல் கண்ணியிலும் சிக்குண்டு திக்குமுக்காடும் சீரிள மைச் செல்வக் குமாரரைக் காணலாம். அவள் கூந்த லில் குடியிருந்த கண்ணிம்ாலேயே இளைஞர் உள்ளமா கிய கலைமானப் பிடித்தற்குரிய வலையாகிவிடும். அவளது விழிகளே கூரிய அம்புகளாக அவ்விளைஞர் மார்பில் தைத்துவருத்தும். இந்த நிலையுற்ற செந்தமிழ் இளைஞன் ஒருவன் இயம்பும் இனிய மொழியைப் பாருங்கள்!

"கொலைமுழு துங்கற்ற கூரிய வாளி

குளிப்ப இன்றென் கல்முழு தும்பட்ட தாலொரு மான்முடிக்

கண்ணியிலே.”

அந்த இளைஞன் பல்கலைச் செல்வன்; பருத்துயர்ந்த பெருக்கோளான் சிறந்த வீரன். அன்ன்ை, தான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வள்ளலார்_யார்.pdf/45&oldid=644436" இலிருந்து மீள்விக்கப்பட்டது