பக்கம்:வள்ளலார் யார்.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கங். என்றும் இறவா கிலே

ஐம்பெருங் குற்றங்களுள் ஒன்ருக வைத்து எண் ணப்படுவது கள்ளுண்டல். திருமகளால் வெறுக்கப் பட்டவர்க்கு விருப்பமான நட்புப் பொருள்களுள் ஒன்று கள்ளாகும்.

"இருமனப் பெண்டிருங் கள்ளுங்கவறுக் திருநீக்கப் பட்டார் தொடர்பு' என்பது தமிழ்மறை.

கள்ளுண்டலாகிய பெருங்குற்றத்தைப் பற்றிப் பேசவந்த பெருகாவலராகிய திருவள்ளுவர் கள்ளுண் ளுமை' என்றே தனி அதிகாரம் ஒன்றை வகுத்தரு ளினர். கள்ளுண்பார்க்கு நல்லறிவு கொளுத்தக் கருதிய அப்புலவர் மிகவும் பக்குவமாகத் தக்கவாறு அறிவுறுத்துகிருர்.

ஒருவன் கள்ளை விருப்புடன் பருகிக்கொண்டிருக் தான். அதனே வள்ளுவர் பார்த்தார். ஐயோ! இவன் பெரிய பாவத்தைப் புரிகிருனே! இவனுக்கு எப்படி அறிவுரை கூறுவது? கள்ளுண்ட மயக்கத்தால் கல்லேக் கொண்டு எறிந்துவிடலாகாதே ? என்று பலவாறு ஆராய்ந்து மிகவும் அன்பாகவும் மரியாை தயாகவும்" "ஐயா! உண்ணற்க” என்று பணிவுடன் வேண்டினர். எதனை? என்று கேட்டான் அக்களிமகன். அதன் பின் னர்த்தான் உண்ணற்க கள்ளை' என்று உரைத்தருளி ஞர். அதற்குமேல் அக்கட் குடியன், உண்ணத்தான் செய்வேன்; நீர் என்ன சொல்லுவது? என்று சிறிது சினந்தான். அவனது நிலையைக் கண்ட வள்ளுவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வள்ளலார்_யார்.pdf/57&oldid=644464" இலிருந்து மீள்விக்கப்பட்டது