பக்கம்:வள்ளலார் யார்.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

弱

தேனமுதத் திருப்பாட்டு &

ஒன்ருகிய யாப்பு என்பது பாட்டின் இலக்கணத்தைப்

பகரும் பகுதியாகும். யாப்பு என்ற சொல்லுக்கே செய்யுள், பாடல் என்ற பொருள்கள் உண்டு.

2 ! ميسان o

இலக்கண ஆசிரியராகிய பவணந்தி முனிவர், செய்யுள் இலக்கணத்தை ஒரு சிறு பாவிலே வகுத்துள் ளார். தோல், இரத்தம், தசை, நார் முதலிய தாதுக் களால் உயிருக்கு உறைவிடமாக உடம்பு அமைக்கப் படுவது போலத்தான் பாட்டு அமைக்கப்படுகிறது. என்கிருர். டாட்டு, பல்வகைச் சொற்களால் பொரு ளுக்கு உறைவிடமாக அறிவுடையோ ரால் அமைக்கப் படுகிறது. அவர்களது அறிவின் பெருமைக்கேற்ப அணிபெறச் செய்யப்படுவது அப்பாட்(

o

டு.

உயிர்க்கு உறையுளாகும் உடம்பைப் படைப் பவன் இறைவன். பொருளுக்கு உறையுளாகும் பொற்புடைய ாடலேப் படைப்பவன் கவிஞன். இறைவன் படைக்கும் உடம்புகள் ஒரு கால எல்லேக் குப் பின்னர் அழிந்து போவன. கவிஞன் படைப்பா கிய பாட்டோ பாருலகம் உள்ளவரைக்கும் அழியாது. கின்று நிலவும் ஆற்றல் உடையது. இதனேக் குமர குருபரர் கயம்படக் கூறுவார்.

« » « » з 9 - ч » * « » . * * * * * - - - * மலரவன்செய் வெற்றுடம்பு மாய்வனபோல் மாயா; புகழ்கொண்டு மற்றிவர் செய்யும் உடம்பு’ என்பது அத்தெய்வக் கவிஞர் திருவாக்கு.

  1. . ஒருவன் உள்ளத்தில் உண்மை ஒளி உண்டாகு மானுல் அவனது வாக்கிலும் ஒளியுண்டாகும். மனமும் மொழியும் ஒளிபெறுமாயின் அவன் தெய்வக் கவிஞகைத் திகழ்வான். அவனிடமிருந்து வெள்ளத்

ഖ-5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வள்ளலார்_யார்.pdf/67&oldid=644487" இலிருந்து மீள்விக்கப்பட்டது