பக்கம்:வள்ளலார் யார்.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

வள்ளலார் யார்?


தின் பெருக்கைப்போல் கலைப்பெருக்கும் கவிப் பெருக்கும் பொங்கியெழும். அவற்றைப் பருகுவா ரெல்லாரும் அறியாமைப் பள்ளத்தினின்று வெளி யேறி அறிவொளியைப் பெற்றுப் பதவி கொள் வார்கள். அவர்கள் இவ்வுலகிலேயே அமரர் சிறப்பை அடைந்து அகமகிழ்வர் என்று உண்மைக் கவிஞர் உயர்வைப் பாரதியர்ர் பாராட்டுவார்.

இறைவன் திருவருட் பேரொளியைச் சிந்தை யிலும் செங்காவிலும் இனிது பெற்ற பேரருட் கவிஞர் பாடியருளிய பாட்டையே திருப்பாட்டு என்று குறிப் பிடலாம். திரு என்பது தெய்வத் தன்மையைக் குறிப்பது. தேன் மிகவும் தித்திப்பான ஒரு பொருள். நாம் அருந்திச் சுவைகண்ட நறும்பொருள். அமு தம் நாம் அறியாதது. பாலாழியில் தோன்றிய அமுதத் தைப் பற்றி நூல்கள் சொல்லுகின்றன. அதனே உண்டவர் தேவர். அது சாவாமைக்குக் காரணமான தேவாமுதம். அதனைத் திருமால், தேவர்கட்கெல்லாம் பகுத்துக் கொடுத்தான் என்பர். நாம் கண்ட தேன்உண்ட தேன், உடல் கோய்க்கு உற்ற மருந்தாவது. உடம்பிற்கும் இருதயத்திற்கும் உறுதி தருவது. நாம் உண்டு கண்ட தீக்தேனேப் போலவும், நூல்கள் போற்றும் ஆற்றல் வாய்ந்த அமுதம் போலவும், நம் தெய்வத் தமிழில் பண்ணமைந்த பாக்கள் எண்ணற் றவை உள்ளன. அவைகளெல்லாம் திருப்பாட்டுக் களே. இறைவனது பொருள்சேர் புகழை விளக்கம் பொன்மொழிப் பாக்களே.

உள்ளத்திற்கும் ஒதுகின்ற காவிற்கும் ஒருங்கே இனிக்கும் உயரிய திருப்பாட்டுக்களே அருளிய தெய்வக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வள்ளலார்_யார்.pdf/68&oldid=991855" இலிருந்து மீள்விக்கப்பட்டது