பக்கம்:வள்ளலார் யார்.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவருள் தீங்கனி 翻靈

--

பழமும் சிறப்புடையன என்பர். இவை தின்னத் தின்

னத் தெவிட்டாமல் தித்திக்கும் திங்கனிகள். இவற்றின் இனிய சுவையைக் கண்ட இராமலிங்க வள்ளலார்,

'தனித்தனி முக்கனி பிழிந்து' என்று பாடுவார்.

இவற்றை யன்றி, வேறு சில வியப்பூட்டும் சிறப் புடைய தெய்வத் திங்கனிகளும் நம் தென் தமிழ்ப் பொதிய மலேயில் திகழ்ந்தன. புளிஞரும் ஏற முடியாத பொருப்பின் உச்சியில் பாறைப் பிளவில் ஓங்கி வளர்ந்த நெல்லி மரத்தில் பன்னிரண்டு ஆண்டுகட்கு ஒரு முறை இன்னமுதக் கனியொன்று தோன்றுமாம். அதனே

உண்டவர் பல்லாண்டுகள் நல்லுடம்பு பெற்று இன் புற்று வாழ்வர். அதனை அரிதின் முயன்று பெற்ற அதியமான் என்ற வள்ளல், தமிழ் மூதாட்டியாராகிய ஒளவையாருக்கு அக்கனியினே அன்போடு வழங்கின்ை. அதன் அருமைகளைக் கூருமலேயே அவர்பால் கொடுத் தான். அந்த நெல்லிக்கனியை உண்டு, அதன் கிள் சுவையைக் கண்ட தமிழ் மூதாட்டியார் அதியமானே

வாயார வாழ்த்தினர்.

'நீல மணிமிடற்(று) ஒருவன் போல

மன்னுக! பெரும நீயே தொன்னிலைப் பெருமகல விடரகத்(து) அருமிசைக் கொண்ட சிறியில் கெல்லித் தீங்கனி குறியா(து) ஆதல் நின்னகத்(து) அடக்கிச் சாதல் நீங்க எமக்(கு) ஈத்தனையே’

கான்பது அம்மூதாட்டியாரின் அமுத மொழியாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வள்ளலார்_யார்.pdf/71&oldid=644496" இலிருந்து மீள்விக்கப்பட்டது