பக்கம்:வள்ளலார் யார்.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவருள் தீங்கனி 了建

பாமாலே தொடுத்து ஈசன் பாதம் பணிந்த காவுக் கரசர் திருவதிகை வீரட்டானத் திருக்கோயில், வாயிலில் நின்றுகொண்டு, தெருவில் வருவார் போவா ராய மக்களேயெல்லாம் கூவியழைத்து, மனிதர்களே! இங்கே வாருங்கள்! வாருங்கள்! ஒரே ஒரு செய்தி சொல்லுகிறேன்,கேளுங்கள் கனி ஒன்று தருகின்றேன்: தெவிட்டாத தீங்கனி தருகின்றேன்," என்று கூறிப் பெருங் கூட்டத்தைத் திரட்டி விட்டார். எல்லோரும் இவர் என்ன கனியைத் தரப்போகிருரோ? தெரிய வில்லேயே? என்று ஏங்கி நிற்கும் வேளையில், கனியைத் தந்தால் அதனை உண்ணுதற்கு உங்கட்கு வலிமை யுண்டா?” என்று கேட்டார். அப்படியானுல் என்ன கனி அது சொல்லுங்கள்!' என்றனர் மக்கள்.அதுவா! ஈசன் எனும் கனி ஏசற்றவர்கட்குச் சாலவும் இனிக்கும் இன்னருள் திங்கனி. சுட்டறிவொழித்துத் திருவருள் மெய்ஞ்ஞானம் பெற்ற மேலோருக்கே அது சாலவும் இனிக்கும் என்று அ றவுரை பகர்ந்தருளினர் காவுக் ógróFT.

'மனிதர் காள்! இங்கே வம்மொன்று சொல்லுகேன்

கணிதந் தாற்கனி உண்ணவும் வல்லிரோ: புனிதன் பொற்கழல் ஈசன் எனும்கனி இனிது சாலவும் ஏசற் றவர்கட்கே

என்பது அப்பர் அருளிய அறவுரையாகும்.

இத்தகைய ஏசற்ற கிலே, மாசற்ற மாண்புடை யார்க்கே உளதாகும். அருட்பிரகாச வள்ளலார் கருவி லேயே திருவருள் நலம்பெற்ற தெய்வச் சீரடியார். ஆதலால் பிறக்கும்போதே அவர் மெய்ஞ்ஞானம் கை வரப்பெற்ற ஞானக்குழந்தையாக அவதரித்தருளினர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வள்ளலார்_யார்.pdf/73&oldid=644501" இலிருந்து மீள்விக்கப்பட்டது