பக்கம்:வள்ளலார் யார்.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சம்பந்தர் சீர் 77

சைவமே வடிவாகிய சம்பந்தர் சிரைப் பாடினுல் சாம்பலும் தெய்வத் திருவுருப் பெற்றுவிடும் அல்ல. வா?’ என்று கூறியருளினர். இங்கனம் ஞானசம் பக்தர் சீரினே ஞாலம் அறியப் பாடியருளிய வள்ளலா ரின் தெள்ளமுதத் திருவருட்பா ஒதுவார் உள்ளத்தை உருக்குவதாகும்.

பண்ணுல்உன் சீரினச்சம் பந்தர்சொல வெள்ளெலும்பு பெண்ணுன(து) என்பார் பெரிதன்றே !-அண்ணுiஅச் சைவவடி வாம்ஞான சம்பந்தர் சீர் உரைக்கில் தெய்வவடி வாம்சாம்பர் சேர்ந்து '

இங்ஙனம் ஞானசம்பந்தர் அருள்வரலாற்றில் உள்ளம் தோய்ந்து சொல்லி வந்த வள்ளலார் பெரு மான், அதனுல் தாம் பெற்ற பேரின்பத்தை மற்றவர் அறியுமாறு விளக்கியருளினர். -

"பேரார் ஞான சம்பந்தப் -

பெருமா னேlநின் திருப்புகழைப் பேசு கின்ருேர் மேன்மேலும்

பெருஞ்செல் வத்திற் பிறங்குவரே' என்பது அவரது அனுபவத் திருவாக்கு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வள்ளலார்_யார்.pdf/79&oldid=644514" இலிருந்து மீள்விக்கப்பட்டது