15
சீமையிலிருந்து — அவர், ‘பிராணவாயு’வையே நோயாளிகளுக்குத் தருவாராம், எப்படிப்பட்ட வியாதியானாலும் குணமாகிவிடுமாம், ஆனால், பணம் அதிகம் கேட்கிறாராம், 500க்குக் குறைவாக வாங்குகிற வழக்கமே கிடையாதாம்—என்ற ஒரு தகவலைத் தருகிறார் ஒரு நண்பர். பாண்டுரங்கனுடைய சக்திக்கு மீறிய காரியம், அந்த வைத்தியம்—அவனோ கடனாளி—500 ரூபாய் கேட்கும் சீமை டாக்டரை நாடமுடியாத நிலை—எனவே, ஒரு நீண்ட பெருமூச்சுடன் அந்தத் தகவலைக் கேட்டுக்கொண்டான்—பிறகுதான், கடவுள்விட்ட வழிப்படி நடக்கட்டும் என்றான். குழந்தை இறந்துவிட்டது—பெங்களூர் பெரிய டாக்டரைப் பற்றிய தகவலைத் தந்த நண்பர், வேறோர் நண்பரிடம் கூறுகிறார், “கடவுள் காப்பாற்றுவார் என்றே நம்பிக்கொண்டிருந்தான் அந்த ஏமாளி, கடைசிவரையிலே!” என்று—கேலியும் கண்டனமும் கலந்த குரலில். பாண்டுரங்கன் கடவுளின் மீது பாரத்தைப் போட்டது, அந்த நண்பருக்கு, ஆத்திகமாக ஆழ்ந்த நம்பிக்கையின் விளைவாக, பாராட்டுதலுக்குரியதாகத் தோன்றவில்லை—ஏமாளித்தனத்தின் விளைவு என்றே அவர், அவன் பேச்சைக் கருதுகிறார்; கடவுளின் மீது பாரத்தைப் போடுவது என்பது ஆத்திகமானால், அதைக் கேலியாகப் பேசுவது நாத்திகம்தானே! ஆனால், அந்தக் கேலி பேசியவர், சோமவார விரதக்காரர், சொக்கநாதரிடம் பக்தி கொண்டவர், பழுத்த சைவர்!!
★★★★
கடவுள் விட்ட வழிப்படி நடக்கட்டும் என்ற ஆத்திக உரையாற்றிய பாண்டுரங்கன், அந்தப் பேச்சை முதலிலே கூறிக்கொண்டிருந்தவனல்ல. குழந்கைக்கு ஜுரம் என்ற உடனே மருந்து தரச் சொன்னான், மனைவியிடம் — பிறகு