இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
39
அறிவாளரின் போக்காக இருந்திடலாமா? எவ்வளவு சிறுபிள்ளைத்தனமாக—நடந்துகொள்கின்றனர், பாமரர் என்பதை எடுத்துரைக்க அஞ்சுவது அறிவுடைமையுமல்ல; ஆண்மையுமாகாது. சிலர் துணிந்து இந்தச் சீர்கேடுகளைப் போக்க, மக்களின் மனதிலே திணிக்கப்பட்டுள்ள மதியீனத்தைக் கண்டிக்க முன்வருகிறார்கள் என்றால், அவர்களையுமல்லவா, ‘கற்று மறந்த கண்ணியர்கள்’ கண்டிக்கிறார்கள். காட்டு மிராண்டித்தனத்தைக் களையவும் துணிவில்லை, துணிவுள்ளோர் களைய முற்பட்டால், பாராட்டும் பண்பும் இல்லை, மாறாக, கண்டிக்கிறார்களே!!