பக்கம்:வள்ளிநாயகியின் கோபம்.pdf/56

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

55

கடுகளவு தவறு என்னிடம் இருந்தாலும், எடுத்துக்காட்டு—கல்லாக மட்டும் இருந்துவிடாதே—பக்தன்! பதைக்கிறேன், பதில்கூறு—உம்! பதில்! எங்கே, நான் கேட்கும் கேள்விகளுக்குப் பதில்—பதில் கூறத்தான் வேண்டும்—இல்லையானால் நான் தருவதைப் பெற்றுக்கொள்ளத்தான் வேண்டும். பூஜை செய்தபோது, வேண்டாமென்றா சொன்னாய், இதோ பூஜை கொடுக்கிறேன், தடுக்காதே, தடுக்க உனக்கு உரிமை கிடையாது! சூடம் கொளுத்தினேன், வேண்டாமடா மகனே! உன் வினையைத் தீர்க்க என்னாலே முடியாது, வீணாக என்னை நம்பி இதைச் செய்யாதே, உன்னை வாழவைக்கும் சக்தி என்னிடம் இல்லை! நயவஞ்சகன் உன்னைக் கெடுத்தால், நான் அவனைத் தடுத்திட முடியாது, சகல உலகையும் ரட்சிக்கும் நாயகியே! என்று என்முன் சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்து பயன் இல்லை, என்றா சொன்னாய்? இல்லையே! சூடம் கொளுத்தினேன், சோடசோபசாரம் செய்தேன்—பெற்றுக்கொண்டாய் அப்போது—இப்போது கணக்கு கேட்கிறேன், காட்டு, இல்லையானால், விழித்துக் கொண்டவன் தருவதையும் வாங்கிக்கொள்—அடித்தால், ஐயோ! பாவி! என்று அலறாதே! என் இஷ்டம் போலச் செய்வேன்! என் இஷ்டம்! முன்பு, என் மனதுக்குச் சரி என்று தோன்றியதைச் செய்தேன்—இப்போதும் அப்படித்தான்—இப்போது இது அக்ரமம்—என்று பேச உனக்கு உரிமை கிடையாது—நிச்சயமாகக் கிடையாது—இருந்தால் பேசு—உம்! வாய்திறந்து பேசு!—வந்திருக்கிறேன், வாழ்த்தி வரங்கேட்டவன்! வணங்கி வரம் கேட்டவன்! பூஜையை ஏற்றுக்கொள்ள மட்டும்தானா, புவனேஸ்வரீ, நீ! பூஜிப்பவனை ரட்சிப்பது உன்வேலை அல்ல அல்லவா! கன்னத்தில் போட்டுக்கொள்ள நான், கனதனவானுக்குக் கரும்பு ருசி