67
காரரிடம் சொல்லி வழக்கை வாபீஸ் வாங்கிக்கொண்டால் நல்லது.
மன்னார்: வழக்கை வாபீஸ் வாங்கிக் கொள்கிறேன். எனக்கும் உண்மை தெரிந்துவிட்டது.
நீதி: என்ன உண்மை?
மன்னார்: அவன் பித்தனல்ல, வழக்குதொடுத்த நான் ஓர் பித்தன் என்ற உண்மைதான்.
காட்சி 5
இடம்: பைத்தியக்கார ஆஸ்பத்திரி.
பாத்திரம்: சில்காட்டான்.சில்காட்டான்: (தனிமையில்) பைத்தியக்காரர் விடுதியாம் இது! உலகம் என்ன, அது பைத்தியக்காரர்களின் பெரிய விடுதி! தனியாக இதற்கொரு கட்டிடமாம், ஏன் இந்த ஏற்பாடு? இல்லாததை உண்டு என்றும், நடவாததை நடந்ததென்றும், கூறிக்கொண்டு கோடிக்கணக்கிலே, பித்தர்கள் வெளியே உலவுகிறார்கள். இங்கே சில நூறு பேரைப் பிடித்து, பைத்தியக்கார ஆஸ்பத்திரி என்று பெயர் கொடுத்திருக்கிறார்கள். அதிலும் பைத்தியம் எனக்குத் தெளிந்த பிறகு, இங்கே தள்ளினார்கள். பாடுபட்டால் பலனுண்டு அது கிடைக்காவிட்டால் யாரோ அதைத் தடுக்கிறார்கள் என்ற அறிவு தோன்றாமல் ஆயாசமடைந்தால் ஆகாயத்தைப் பார்ப்பதும், பசித்தால் பரமனை வேண்டுவதும், கஷ்டம் விளைந்தால் காளியைக் கும்பிடுவதுமாக இருந்த பைத்தியம்போய், மாரியாவது மண்ணாங்கட்டியாவது, எல்லாம் வெறும்