பக்கம்:வள்ளிநாயகியின் கோபம்.pdf/86

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

85

என்னதான் காரணம்? எந்தத் தீயவன் என்ன தீங்கிழைத்தான்? தேவி! தெரிவி இப்பொழுது! திரிபுரம் எரித்த எனக்கு அத்தீயவன் எம்மாத்திரம்.”

“போதும் போதும் உங்கள் வீரப் பிரதாபம். யார் என்னை என்ன நிந்தித்தாலும் உமக்கென்ன? இவளுக்காகப் பரிந்து பேச யார் இருக்கிறார்கள் என்ற தைரியத்தில் யாராரோ என்னை இழித்தும் பழித்தும் பேசுகிறார்கள், என் கதி இப்படி இருக்கிறது, நீங்களோ ஆனந்தத் தாண்டவமாடுகிறீர்.”

“ஆஹா, உன்னையா இழித்தும் பழித்தும் பேசினார்கள்? எங்கே இருக்கிறது அந்த நாஸ்திகக் கும்பல்? கூப்பிடு ரிஷபத்தை! கொண்டுவா சூலாயுதத்தை! ஒரு நொடியில் துவம்சம் செய்துவிட்டு வருகிறேன்.”

“நாஸ்திகக் கும்பல் என்னைப்பற்றி இழித்துப் பேசினால், நானே அவர்களைச் சம்ஹரித்து விட்டிருக்கமாட்டேனா!”

“அங்ஙனமாயின், ஆஸ்திகச் சிகாமணிகளா, உன்னை இழிவாகப் பேசினர்?”

“ஆமாம் - அதுதான், என் மனதைக் குழப்புகிறது.”

“மாதர் திலகமே!! என்ன கூறினர் - ஆஸ்திகராயிருந்தால் என்ன - நாஸ்திகராயின் என்ன - உன்னை நிந்தித்தவர், எவராயினும் என் விரோதிகளே ஆகின்றனர். யார் அவர்கள், கூறு?”

“தங்கள் ஜடா முடியிலே தங்கும் தவப்பயன் பெற்ற, எனக்குள்ள மகிமை, இந்த ஈரேழு பதினாலு லோகத்திலும், போற்றப்பட்டு வருவதாகத்தானே, தாங்கள் கூறுகிறீர்கள் - தேவரும் கூறுகின்றனர்...”

“அதிலென்ன சந்தேகம்! மாந்தரும், ஒப்புக்கொண்ட

6