8
சொன்னாங்க?” என்று மீண்டும் கேட்கிறார். எடுபிடி, “ஆமாங்க! ஆறுக்கு மேலேயே இருக்குமாம்” என்று பதிலளிக்கிறார்—மீண்டும் ஒரு பெருமூச்சு, மறுபடியும் “அம்பிகே!” என்று அழைக்கிறார், கடை முதலாளி.
★★★★
இப்படிப்பட்ட நிகழ்ச்சி அன்றாடம் நடைபெறுகிறது—சர்வ சாதாரணமான நிகழ்ச்சி என்று கருதுகிறோம், ஆகையினாலேதான், இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளைப்பற்றிச் சிந்திக்காமலேயே இருக்கிறோம்.
★★★★
சந்திரசேகரருக்கு ஆறாயிரம் ரூபாய் இலாபம் கிடைத்தது—முடங்கிக் கிடந்த சரக்கு விற்பனையாகிவிட்டது. இந்தச் ‘சேதி’யைக் கேள்விப்படும், கடை முதலாளியின் கிடங்கிலே சரக்கு அடைபட்டுக் கிடக்கிறது—ஏட்டிலே இலாபம் குறிக்கப்படவில்லை—இந்நிலையில், வேறொருவர், வியாபாரத்திலே வெற்றிபெற்றார் என்று கேள்விப்பட்டதும், பெருமூச்சுடன், அம்பிகே! அம்பிகே! என்று அழைக்கிறார்! அவ்விதம் அவர் அழைக்கும்போது, அவர் மனப்பான்மை என்ன? பக்திப் பரவசத்திலே, அவ்விதம் கூவி அழைத்தாரா? பாராட்டுதலுக்காக அழைத்தாரா? துணை செய் என்று கூப்பிட்டாரா? அவன் அடித்துவிட்டானே கொள்ளை, எனக்குக் கிடைக்கவில்லையே, நான் உன்னைப் பூஜை செய்தவண்ணம் இருப்பவனாயிற்றே, என்ன செய்தாய் எனக்காக, அதோ பார் சந்திரசேகரன் இலாபம் சம்பாதித்துவிட்டான், உன் சக்தியை என் பக்திக்காக மெச்சி என் பக்கம் திருப்புவாய், எனக்கும் இலாபம் கிடைக்கும் என்றுதானே நம்பி உனக்கு நெய் விளக்கு ஏற்றினேன், இருந்தும், என்னைக் கவனிக்காமலிருக்கிறாயே—என்று அம்-