96
சிறையில் போடுவதுபோல அல்லவா செய்துவிட்டிருக்கிறார்கள்” என்று பேசினார் சோகமாக.
“தேவீ! உன் காதிலே அவர்கள் அப்போது போட்ட கூச்சல் விழுந்திருந்தால் தெரிந்திருக்கும் அவர்களின் போக்கும் குணமும். போட்டுப் பூட்டடா, என்ன நடந்து விடுதுன்னு பார்க்கலாம்” என்று ஒருவன் கொக்கரிக்கிறான்.
“பெரிய பூட்டு கொண்டுவா” என்று கூவுகிறான் ஒருவன்.
“அலிகார் பூட்டு வேண்டுமா?” என்று கேட்கிறான் இன்னொருவன். இவ்வளவு கூச்சல், துணிவு! போட்டுப் பூட்டுங்க, பார்க்கலாம், எவன் வந்து என்ன செய்து விடுகிறான்...என்று கூவி, “தேவி! என்னை பெரிய அறையிலே போட்டுப் பூட்டிவிட்டுப் போயேவிட்டார்கள்.”
“வெளியே சிரிக்கிறார்கள்—இனி பார்க்கலாம் என்ன நடக்கிறது என்று!—நான் உள்ளே போய் அடைபட்டுக்கிடக்கிறேன்—என்னைப் போட்டுப் பூட்டிய ‘பாவிகள்’ சிரிக்கிறார்கள்! நான் கேட்கலாமா அவர்களைப் பார்த்து, இதென்ன அக்ரமம்—திறந்துவிடுங்கள் என்னை — இல்லையானால் மூக்கிலும் வாயிலும் இரத்தம் வரச்செய்வேன் கைகால்களை முறித்துப் போட்டுவிடுவேன் — என்று பேசலாமா! அவர்களோ என் பக்தர்கள்! நானோ அவர்களால் வணங்கப்படும் சாமி. தேவீ! மனம் எவ்வளவு பதறி இருக்குமென்று யோசி”—என்றார் கருப்பண்ணர்.
“கருப்பண்ணரே! அது கிடக்கட்டும், ஏன் பூட்டினார்கள்...என்ன செய்தீர்?”—என்று கேட்டார் தேவியார். கருப்பண்ணர் சிரித்துவிட்டு, “நானா? என்ன செய்தேனா? அவர்கள் என் எதிரே இருந்துகொண்டு சொல்லிவந்த புளுகுகளை எல்லாம் கேட்டுச் சகித்துக்கொண்டிருந்தேனே அது