பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருட் பயனிலை 99

அதனாற் பெரும் பயன் என்? என்றும் இடையறாது நீரோடுமாறு அணைகட்டி நீர்காப்புச் செய்வது போல், இடையீடின்றி மருத்துவம் நடக்குமாறு பொருள் வைப்பும் செய்யவேண்டும். ஆதலால், அளவு அறிந்து ஈக’ என்ற செய்நடையிற் கூறாது, ஒப்புரவு ஆண்மை வளவரை வல்லைக்கெடும் என அச்சநடையிற் கூறினார். “ஈகையாள ரெல்லாம் ஒப்புரவு செய்வார் என்பதற்கு இல்லை. பரந்த பெரும் ஒப்புரவாளர் ஈகையும் செய்வர் என்ற துணியான், உலகு அவாம் பேரறிவாளன்’, ‘நயனுடையான், பெருந்தகையான், கடன் அறிகாட்சியவர் என ஒப்புரவாளர்களை நன்கு புகழ்வர். பொருள் ஈட்டியவன் வருவாய்க்கு உட்பட்ட செலவு செய்க, அளவு அறிந்து ஈக: உளவரை தூக்கி ஒப்புரவு ஆளுக எனப் பொருட் பயன்களை யெல்லாம் ஒருங்கு உளத்திற் கொண்டு,

அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல இல்லாகித் தோன்றாக் கெடும் (479)

எனக் கூட்டி முடிப்பர். ஈட்டிய செல்வத்தைப் பயன்கொள்ளும் அறிவின்றேல், பொருட் கேடு ஒருபுறம் நிற்ப, வாழ்க்கையே கெடும் என்ப. பொருளுடைமை வாழ்க்கையன்று; அதன் பயன் கொள்ளும் அறிவுடைமையே வாழ்க்கை என்ற துணிபான், அளவு அறிந்து வாழாதான் என அறிவின்மேற்றாய் இயம்பினார். ஈட்டிய பொருட்கண் தனக்கு எவ்வளவு, பிறர்க்கு எவ்வளவு என்னும் பகுத்தறிவு வேண்டும். தனக்கே அவ்வளவும் எனப் பற்றுவது வாழா அறிவில் வாழ்வு என விடுக்க. இதுகாறும் பொருள் குறித்து எடுத்துக் காட்டிய குறள்களால், அவை குறித்து விரித்த விளக்கங்களால், உலகு ஒட்டும் அறங்கரையும் வள்ளுவம் இன்ன பண்பிற்று என்பது மலைவின்றி அறியத்தகும்,

பொருட்பயன் என்ற இச் சொற்பொழிவின் இறுதியாக, இன்று காலை குறள் அன்பர் சிலர்க்கும் எனக்கும் இடையே நடந்த ஒர் உரையாடலை, அன்னோர் உடன்பாடு பெற்று, உங்கள் முன் அறிவிக்க விரும்புவல். வள்ளுவம் என்னும் குறட் சொற் பொழிவுகளைத் தொடர்ந்து கருக்கிடையாய்க் கேட்டுவரும் நண்பர் பதின்மர் இன்று காலை ஒன்பது மணிக்கு என் சிறு மனை போந்தனர். நாங்கள் பெருஞ் செல்வம் உடையோம் என்றும்,