பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆள்வினைச் செல்வர்களே!

பெருநல் வணக்கம். முந்திய நாள் பொருள் நிலை பற்றியும், நெருநல் பொருட்பயனிலை பற்றியும் வள்ளுவர் கருத்துரை கேட்ட நீவிர் இன்று செல்வத்தின் இறுதிச் சொற்பொழிவாகிய ‘இன்மை நிலை பற்றிக் கேட்கும் அவாவொடு குழுமியிருக்கிறீர்கள். பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லாகி யாங்கு (247), ‘இல்லாரை எல்லாரும் எள்ளுவர், (752), பொருளல்லது இல்லை பொருள்,(751), பொருள் என்னும் பொய்யா விளக்கம்,(753) என வரூஉம் சில குறள்களையே பலர்வாய்க் கேட்ட நமக்கு, செல்வப் பொருள் ஒன்று குறித்து முற்சொற்பொழிவிற்குத் திருக்குறள் இடந்தந்து நிற்கும் செறிவு மெய்யாகவே மருட்கை யூட்டுகின்றது. இன்மை நிலையையும் ஒரு நிகர் பொருளாகக் கொண்டு வள்ளுவர் காட்டும் அரிய செயற் குறிப்புக்களைக் கொண்டு, நாமென்ன அறிவுசால் உலகமே இறும்பூது எய்தும் என்பது துணிபு.

வாழ்க்கை நூல் செய்த வள்ளுவர் அனைத்து நிலையினரையும் உட்கொண்டு அறங்கள் கூறினாரேனும், தாய்க்குப் பேதைப்பிள்ளை நினைவே பெருகித் தோன்றுமாப் போல அவர்க்கு நிலைதாழ்ந்தார் முன்னேற்றம் நெஞ்சுட் கிடந்தது. மற்று முன்னரே நிலையுயர்ந்தார் அவ்வுயர்ச்சியைப் பேணிக் கொள்ளுமதுவே முதற்கண் செயக் கிடப்பது என்பது ஆசான் காட்சி. அக்கருத்தான், குன்றுபோல் உயர் வாழ்வினரும் குன்றிமணி யளவு குற்றம் செயின் நிலை தாழ்வார் (965) என்றும், பெருநிலை பெற்றார் சிறுமை பயக்கும் எளிய செயல்களைச் செய்யப் புகார்; செய்வதாயின் அருஞ்செயல் களையே ஆற்றுவர்’ (975) என்றும், சான்றாண்மைக் கடலுக்குக் கரையெனத் தகும் நிலையுயர்ந்தார் ஊழி பெயரினும் தம் நிலை பெயரார் (990) என்றும் மேன்மைநிலை தாழாமைக்கு உரிய அறிவுடைமை காட்டி விடுப்பர். இம்மேலோரை அவ்வளவில்