பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன்மை நிலை 107

வள்ளுவர் வழி தேடினர்; தொகுப்பும், தாமே துய்ப்பும் இழிவு என்ற சிறுமை யுணர்ச்சியை எழுப்பினர், செல்வனுக்குத் தாழ்வாவது கொடாமையாதலின், தாழ்வு இலாச் செல்வரும் சேர்வது நாடு’ (731) என இன்றியமையாமை சுட்டினர். இவ்வெல்லாம் நினைந்து, சிலர்மாட்டுத் தொக்க பொருளை நாட்டிற் சமப்படுத்த வேண்டி, பெருங்கொடையாம் ஒப்புரவுப் பண்பினைத் தணியதிகாரமாக வகுத்தனர்; ஒப்புரவின் நல்லபிற பெறல் அரிது (213) என்று வலியுறுத்தினர். யார்மாட்டும் தனியுடைமைப் பற்றைக் குறைக்க வேண்டி ஈதலே நன்று என்றும், அதுவே பொருள் வைக்கும் நல்லிடம் என்றும் வழிப்படுத்தினர்.

பொருள்வலி அரசிற்கும் தனி மகனுக்கும் இன்றியமையாதது. வாங்கும் ஆற்றல் அரசிற்கு வரியாலும் தனி மகற்குத் தொழில் முயற்சியாலும் வருவது. கொள்ளாற்றல் இன்மையே வறுமை எனப்படும். பொருள் மெலிவுடைய அரசு நாட்டுக்குப் பொது நலன்கள் செய்யவியலாது. தொழில் இல்லா மனிதன் தன் பசியும் தீர்த்துக் கொள்ளவியலான். இப்பொதுக் குறையும் தனிக் குறையும் ஒப்புரவு ஈகைகளால் நிறை செய்யப்பட வேண்டும். ஒரு சில செல்வரேனும் இல்லா ஊரில்லை. தம்மூர்க்கு வேண்டும் பள்ளிக் கூடம், மருத்துவ விடுதி, கைத்தொழிற் களம், விளையாடு களம் என்றின்ன பொதுப் பணிகளை அன்னோர் தனித்தோ சேர்ந்தோ செய்ய வேண்டும். இதுகாறும் அங்ஙன் செய்யக் கண்டிலம். வித்தி வான்நோக்கும் உழவன் போலத் திட்டம் வகுத்து வரி நோக்கி யிருக்கும் அரசுக்கு ஊர்தோறும் பொதுநலம் புரக்கும் பொருளாற்றல் இல்லை. தம்மூர் அளவுக்கேனும் பணியாற்றல் தம் கடன் என்று ஊர்தோறும் செல்வர் மேற்கொண்டிருப்பரேல், இப் பொது வுடைமைப் போருணர்ச்சி தோன்றியிராது. இனியேனும்-விரைந்து ஊர்ப்பணி தம் பொருளாற் செய்வரேல், இவ்வுணர்ச்சி பரவாது.

“பணைகெழு வேந்தரை இறந்தும் இரவலர்க்கு ஈயும் வள்ளி யோன்” எனப் புகழும் பாரியும், “எழுவுறழ் திணிதோள் எழுவர் பூண்ட ஈகைச் செந்நுகம்” எனப் புகழும் பேகன் முதலா எழுவரும், நல்லியக்கோடன், குமணன், பண்ணன் முதலாய பல்லோரும் பெரும் ஒப்புரவுச் செல்வர்களாக இருந்தமையால் அன்றோ.