பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன்மை நிலை 1 11

பாட்டில் எழுந்த இலக்கியப் பகுதிகள் நயத்தேன் துளிப்பன. மனங் கலந்த இவ்விலக்கியங்கள் நமக்குக் கொள்ளை கொள்ளையாக உள. பாணனாகக் கூத்தனாகப் பொருநனாக விறலியாகத் தம்மை முழுதும் எண்ணிக்கொண்டு, பண்டைப் புலவர்கள் யாத்த ஆற்றுப் படை இலக்கியப் பாக்களை - அஃதாவது உறவிலக்கியங்களை - நாம் கல்லாதோம் அல்லோம். மக்கட்பேற்றால் உலகம் நீடு வாழ்தல்போல, சங்க நூற் பேற்றால் நம் தமிழ்த்தாய் என்றும் வாழ்வள். சங்க நூல்களின் இயற்கையும், அழகும், தூய்மையும், சொற்றிறமும் சிற்றளவாகவே இற்றைத் தமிழர் அறிந்து வருப. அந் நூல்களை நிரம்பக் கல்லாக் குறையால், பொய்க்கோட்பட்டு நெறியல்லாதவற்றை நெறியாகப் பற்றி, மடிந்து முடங்கி வளைந்து சுருண்டு தமிழகம் முன்னேற்றம் குறைந்து நிற்கின்றது. கண்ட இவ்வுலகத்து, எடுத்த இவ்வுடல் கொண்டு, தூயவாழ்வு காட்டும் அவைய நூற் கல்வி பரவாது புதையுண்டமையால் அன்றோ, வள்ளுவர் மாசில் தனி நெஞ்சமும் அடுப்படி ஒவியம் போல் நம்மனோர்க்கு மறைபட்டுக் கிடக்கின்றது. குறள் நூல் சங்கக் குடிப்பிறப்பு உடையது. அது சங்கத் தமிழ்த்தாய் பெருநலத்தோடு ஈன்ற ஈற்றுக் குழவி. திருக்குறட் பொருள் நன்னர் விளங்க வேண்டின், நன்றாகக் குறிக்கொண்மின் சங்க நூற் கல்வி செவ்வன் வேண்டும். இவ்வரலாற்று அடிப்படையை உங்கட்கு உணர்த்தவே, என் சொற்பொழிவுகட்கு இடையிடை சங்கநூற் பகுதிகளை மேற்கோளாகக் காட்டி வருவல். நிற்க. +

உலகவிலக்கியப் பேராசிரியர் வள்ளுவர், வறியோர் வேறு, தாம் வேறு எனப் பிரிந்து நின்றார் |6, குறள் கற்பார்க்கு அங்ஙன் பிரிவுணர்ச்சியை ஊட்டினார் அல்லர். வறியநிலையைத் தமக்கே ஏற்றிக் கொண்டு,

இன்றும் வருவது கொல்லோ நெருநலும்

கொன்றது போலும் நிரப்பு (1048) என மனம் துடித்தனர். நாள்தோறும் படாதபாடு பட்டு நாய்போல் அலைந்து திரிந்து கிடைத்ததைக் கொண்டு பொழுது வீழ் அமையத்து ஒருவாற்றான் பசியாற்றிக் கொள்ளும் மக்கள் பலப்பலர். ஒருநாட் போவது அவர்கட்குப் பெரும் பாடாகத் தோன்றும். செத்துப்