பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 வள்ளுவம்

சுட்டாது. ஈக (477) என்பது போல் விதிநடைப்படுத்தி இரக்க என்றனர், இரப்பும் ஒருவழியாக ஆணைப்பட இந்நூல் கூறுமேல், திருக்குறள் வாழ்க்கைச் சுவடி என்ற துணிபிற்கு வேறு சான்று வேண்டுங்கொல்! ...

இரத்தல் உயர்வழியென வள்ளுவர் கொண்டவர் அல்லர். உதவி சிறிதாதலும் பெரிதாதலும் உதவி செய்யப்பட்டார் சால்பின் வரைத்தாதல்போல, இரப்பு இழிவாதலும் உயர்வாதலும் இரக்கப் பட்டார் தகுதியைப் பொறுத்தது. “இரக்க என வழியோதிய ஆசிரியர், ‘இரத்தக்கார்க் காணின் (1051) என இடமும் சுட்டுவர். இகழாதும், எள்ளாதும், கரவாதும் ஈவார் கிடைத்து இரப்பின், அவ்விரப்பு பழியன்று என்றும், இன்பம் என்றும், ஓர் ஏளர் உடைத்து’ என்றும், ஈதலே போலும் என்றும் சிறப்பிப்பர். “இரக்க இரத்தக்கார்க் காணின்” என்ற வரையறையால், வள்ளுவர் சொல்லும் இரவு, மானநான வொழுக்கங்களைப் போக்காது நின்றே உயிரோம்புவது என்று அறியப்படும்.

அறிஞரெல்லாம் மூக்கிற் சுட்டுவிரல் சேர்த்தும்படி இரப்புநெறி கூறும் நம் வாழ்க்கை ஆசான், ஒன்று தெரிக்க விரும்புவர். இரத்தல் எளிதாயினும் இரத்தக்கார்ப் பேறு அருமையெனக் காட்ட நினைவர். வறியார்க்கு ஈவதே ஈகை எனக் கொடையிடம் சுட்டினாற் போலக் கரவார்பால் இரப்பதே இரவு எனப் பெறுமிடம் சுட்டுவர். உயிர் ஒம்புதற்கு யாதுஞ் செய்யலாம் என்பது அறமன்று; அதற்கும் ஒரு வரையறை உண்டு. பசி தீர்த்தற்கு யார்மாட்டும் இரக்கலாம் என்பது நெறியன்று; அதற்கும் ஓர் எல்லைப் பண்பு உண்டு. பிற ஆசிரியர்கள் போல மேலெல்லை அறங்களையே பேசிநில்லாது, யாரும் வாழ்தற்குக் கீழெல்லை அறங்களையும் மிகுந்து கரையும் அன்பு நோக்கினர் வள்ளுவராதலின், இரக்கவென மொழிந்தனர். ஆயின் யாவர் கண்ணும் பசித் துடிப்பால் இரக்கப்படுவது கீழெல்லை அறமாகாது.அறக்கடையாய் விடுமாதலின், தம் கூற்றைச் செவ்வன் தெரிவிப்பான், இரத்தக்கார்க் காணின்’ என வேலி கோலினர். தகாதார்பால் இரப்பு அழிபசியைத் தணியாமை மேலும் பழியாகும் என்பது கருத்து.