பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11 8 வள்ளுவம்

கொண்டு நடப்பது போலவும், எவ்வாற்றானும் முயற்சி இல்லுழி அவ்வமயத்திற்கென இரந்துகொண்டு பசியாறுக என்பதுவே திருக்குறள் சொல்லும் இரப்பின் உட்பொருள். இதுவே வள்ளுவர் நெஞ்சம். இடக்கையால் உண்ணற்கென்று வலக்கை புண்ணுறுத்திக் கொள்வாரும், கோலால் நடத்தற்கென்று கால் முடப்பட்டுக் கொள்வாரும், பிச்சையால் பசி தீர்த்தற்கென்று உள்ள தொழிலைப் போக்கிக் கொள்வாரும் உளரோ உளராயின், அன்ன முழு மக்கள் நகுதற்கு உரியரன்றி எண்ணற்கு உரியர் அல்லர்.

பசி தீர்க்கும் வழி இரண்டனுள் இரப்பு யாரும் நினைப்பது போல் எளிய முறையன்று. பத்து மணிக்குச் சென்று இரந்தால், ‘இன்னும் சமையல் தொடங்கவில்லை என்ப. பதினொரு மணிக்குச் சென்றால், இன்னும் சமைத்து முடியவில்லை; அடுப்பும் துடுப்புமாக இருக்கும் நிலையில் உனக்கு அள்ளிப் போடுவது யார்?” என்ப. நண்பகல் பன்னிரண்டு மணிக்குச் சென்றால், இன்னும் யாரும் உண்ணவில்லை; வடித்து உனக்கு முதலில் போட முடியுமா?” என்ப. ஒருமணிக்குச் சென்றால், இப்போதுதான் உண்ணுகிறோம். என்ப. இரண்டு மணிக்குச் சென்றால், இன்னும் எல்லாரும் உண்டு முடியவில்லை என்ப. மூன்று மணிக்குச் சென்று இரந்தால், ‘உண்டு கழிந்து நேரம் ஆயிற்று: மிச்சமில்லை என்ப. ஏன் அம்மா! போட மனம் இல்லை என்று முன்னே சொல்லப்படாதா எனப் பிச்சையாளன் எதிர்த்துரை செய்தால், “இரப்பான் வெகுளாமை வேண்டும்” (1060) என்று வள்ளுவரும் இடித்துரைப்ப, “இரக்க இரத்தக்கார்க் காணின்” (1051) என உடன்பாட்டு முகத்தான் குறள் யாத்த ஆசிரியர், -- -

இரப்பன் இரப்பாரை யெல்லாம் இரப்பின் கரப்பார் இரவன்மின் என்று - (1067) என எதிர்முறை முகத்தான், எளியார்க்கு எளியராய் வேண்டிக் கொண்டனர். கரப்பாரே உலகத்துப் பலராதலில், மானம் தீரா இரவு அரியது என்று உணர்த்தினர்.

இரந்தும் வாழ்வேன் என்பது ஒருவன் குறிக்கோள் ஆதல் இல்லை. இரவலையும் மருந்துண்டதுபோல் நிலைத்த ஒரு நேர் நெறியாக, தொழிலாக ஒருவன் எண்ணிவிடின், அவன் மக்கள்