பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 வள்ளுவம்

காக்கின்றனர். ஒரு சாரார் தங்கள் குலப்பெருமையே நினைந்து, வீட்டு வேலையும் வெளிவேலையும் செய்யாது மடிகின்றனர். ஒரு சாரார் தொழில்களில் உயர்வு தாழ்வு பேசிக் கொண்டு, ஒரு தொழில் அற்ற காலை மறு தொழில் பார்க்க முனையாது வாளா இருக்கின் றனர். கற்பு என்னும் பெயரால் ஒரு சார்ப் பெண்ணினத்தின் மெய்ம் முயற்சியைச் சமூகம் கொல்லுகின்றது. பட்டி தொட்டிகளில் வாழும் ஆண் பெண் மக்கள் முயற்சிக்கு உறைவிடமாய் வாழ, நகர மக்கள் முயற்சிக் கொல்லிகளாய்ப் பெருகி வருகின்றனர். குடிசெய்வார்க்கு இல்லை பருவம் மடிசெய்து மானம் கருதக் கெடும் (1028) என்பது ஆசான் காட்டும் பொய்ம்மானப் புரட்சி.

முயற்சிவழி அறையும் r மக்களின் பொருந்தாக் கோட் பாடுகளை - முயற்சிக்கு இடையூறாம் பொய்ம் மனப் பற்றுக்களைக் - காண்கின்றார். செயல் நெறி காட்டுவது மட்டும் தங் கடன் அன்று: செய்ய வொட்டாது விலங்கும் @ கடிந்து அகற்றுவதும் தங்கடன் எனத் துணிகின்றார். அத்தப் பெண்ணங்களுள் அவர் கண்ட ஒரு தடிப்பெண்ணமாவது ஊழ்க் கொள்கை. ஊழின் பெயரால், பசிக்கும் பிணிக்கும் பிற நோய்களுக்கும் வாழ்வளித்து, மடிமடிப் படும் பேதைப் போக்கு களைக் கண்டார். ஊழ் கெடுதலையே செய்வது என்னும் ஒரே மயக்கினராய், அம் மயக்க வாள் கொண்டு வாழ்வுக் கிளைகளை யெல்லாம் தாமே வெட்டி வீழ்த்தி, வேருக்கும் முயற்சி நீர் பாய்ச்சாது, தோலுரித்த பட்டமரமாய், மக்கள் நிற்கும் பாழ்நிலைகளைக் கண்டார். நன்கு தளிர்த்துக் கிளைத்துப் பூத்துக் காய்த்துக் கனிந்து இனித்து வாழ எண்ணாது, சாவுக்கே பிறந்தாராகி, உடும்புபோல் ஆகாக் கொள்கைகளைப் பிடியெனப் பிடித்துத் தேய்ந்தழியும் பாவிப் பிறப்புக்களைக் கண்டார். பெறுமவற்றுள் மக்கட் பேறே யாம் அறிந்த பேறு-எனத் துணிந்த வள்ளுவத் தோன்றல், இவ்வழிவுச் செலவெல்லாம் பார்த்து மனம் வெதும்பி நைந்தார். அவர் மனத்து எழுந்த ஆய்வுகள் பலப்பல.

வலியுடையது ஊழா முயற்சியா? முயற்சிப் பயனை அழிக்கும் திறம் ஊழுக்கு உண்டா ஊழ் என்பது தீஊழையே சுட்டுமா? ஊழ்