பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிவுடைப் பெருமக்களே!

நும் அனைவர்க்கும் என் தலை வணக்கம். ஐந்து நாள் மாலை தோறும் இதுவரை திருக்குறள் பற்றி ஐவகைச் சொற்பொழிவுகள் என் முகமாகக் கேட்டுப் பெருமைப்படுத்தினர்கள். பல்லாயிர மக்கள் திரளாகக் குழுமியிருக்கும் இவ்வவையின் முகமலர்ச்சி, உள்ளக் கிளர்ச்சி, அறிவுணர்ச்சி முதலாய எழுச்சிகளை உவந்து காணும் யான் ஒரு மொழித்தாய் வயிற்றுப் பிறந்த உங்கள் முன்னர் உரையாற்ற வந்த பெரும் பேறு உடையேன். பேறு அளித்த நுமக்கெல்லாம் தனித் தனி நன்றி செலுத்துவல்.

வாழ்க்கை யறிவு சான்ற வள்ளுவத் தோன்றல் பெயரால் நிறுவிய வாய்மைக் கழகத்தின் சார்பாக, என் திருக்குறட் சொற் பொழிவுகள் நிகழ்வன என்று நீவிர் அறிவீர். இக்கழக அன்பர்கள் மூவாண்டுகட்கு முன் என்னை அணுகி, திருக்குறள் குறித்துப் பல் பொழிவு ஆற்றுக’ என்று வேண்டினர். எக் கழகத்தார்க்கும் சொல்லும் வழக்கம்போல் இக் கழகத்தார்க்கும் பேச மறுதலித்தேன். இந்திய நாடு உரிமை பெற்ற நாள் முதல், பிற ஆக்கம் பெருகாது எத்துறைக் கண்ணும் பேச்சே பெருகுவதைச் சுட்டிக் காட்டினேன். சொல்வார் செயலற்றுச் சொல்லக் கேட்பார் மன மற்றுக் கேட்டொழியும் நாட்டின் வளராச் சிறுமையை விளம்பினேன். நாகரிகம் என்னும் பெயரால் பட்டி மக்கள் பட்டினத்தாராய் மாறுதல் போல, குடியரசு என்னும் பெயரால், குடிமக்கட்கு அறிவு கொளுத்துதல் என்ற மேற்கோளிட்டுச் செயற்கு உரியாரெல்லாம் சொற்குரியாராய்ப் பெருகி வருவதை எடுத்துக் காட்டினேன்.

திருக்குறள் பற்றிச் சொல்லாற்றுவார் உட்கிடை இன்று பலப்பல. தாய்மொழியாகத் தமிழினைப் பெற்றிருந்தும், அத்தாய் பல்லாயிர வாண்டு கருக்கொண்டு, பொறையுயிர்த்த அறிவுத் திருக்குறளைக்