பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிவுப் பிறப்பு 127

கற்றிலோம் என்றால், கல்லாத் தமிழரை இற்றைத் தமிழகம் நன்கு மதியாது என்று அஞ்சி, யாமும் குறள் கற்றுள்ளோம் என்பதை ஊரார்க்கு விளம்புவான், கைத்துண்டில் மிகச்சில குறள்களை எழுதி வைத்துக் கொண்டு ஆகுல நீர்மை செய்வார் ஒருசாரார். “யாம் அறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிது ஆவது எங்கும் காணோம்” என்று நாட்டுப் புலவன் உண்மை மொழிந்தாங்கு, பெருமைப்படத்தக்க தமிழ்ப் பிறப்பு எடுத்தும், திருக்குறளைப் பிறமொழி வாயிலாய்ப் பயின்று விளம்புவார் ஒருசாரார். திருக் குறள் ஒரடியும் கலலாது. குறட் பெருமை சாற்றும் பிறர் புகழ்க் கருத்துக்களையே, தாமும் ஒப்பித்துத் தம் அறிவில் பற்றுடைமை காட்டி நிற்பார் ஒரு சாரார். குறள் முழுதும் அறிவேம்; அதன் உரைபலவும் எண்ணியாங்கு எடுத்துவிட வல்லுநம் என்று ஆற்றல் காட்ட முனைவார் ஒரு சாரார். தலை கீழாகக் கீழ் மேலாக ஒப்பிப் போம்; எவ்வெண் கொடுத்து, எச்சொற் கொடுத்து, எக்குறிப்புக் கொடுத்து வினவினும் குறள் சொல்ல வல்லேம்’ என்று பரிசிலிடுவார் ஒருசாரார். மேடைச் சரக்கெனக் கற்பாரும், தேர்வுப் பாடம் என உருப்போடுவாரும், ஆசான் சமயம் காண ஆராய்வாரும். இலக்கியம் நோக்கி இலக்கணம் நோக்கி மொழியறிவு நோக்கி ஆய்வாரும், ஒப்பு நோக்கிக் காண்பாரும் எனவாங்கு திருக்குறள் கற்பார் சொல்வார் கேட்பார் எழுதுவார் உட்கிடை பலதிறத்தன.

இவ்வெல்லாம் முற்றும் தகாதன என்பது என் கருத்தன்று. மக்கள் பல நிலையினர் என்பது வள்ளுவம் ஆதலின், எந்நிலை யிலாவது நின்று குறள் கற்பரேல், அக் கற்பு நெஞ்சார வரவேற்கத் தக்கது. குறட் கல்வி எனைத்தளவு பெறினும், பெற்ற அனைத் தளவிற்கு நம் வாழ்க்கை உரம்பெறும். மேலும், தவச்சிறிய நல்ல தொன்றின் பயன் இவ்வளவிற்றுத்தான் என்று ஒரு தலையாகக் கணித்துவிடமுடியாது. ஆதலின் யார் உள்ளம் யாவண்ணம் ஆயினும், அவர்தம் குறள் நட்பு சிறிதும் இகழற் பாற்றன்று. எனினும் திருக்குறள் மாட்டுத் தொடர்பு கொள்வார் யாரும் தலைநின்ற ஒன்று நினைதல் வேண்டும். பிறபயன்கள் உளவேனும், ஆவின் முதற்பயன் பால் என்றும், சோற்றின் முதற் பயன் பசி நீக்கம். என்றும் கொள்ளும் உண்மை போல, குறளின் முதற்பயன்