பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 வள்ளுவம்

பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த மக்கட்பேறு அல்ல பிற (61) என்பது எஞ்ஞான்றும் மாறா அடிப்படைக் குறள், “மக்கட்கு அறிவு பிறப்பிலேயே அமைந்து கிடப்பது: கருப்பட்ட ஞான்றே அறிவுத் திருவுடையார்” என்னும் பொய்யாத் தனிப்பெரு முதலுண்மையை நினைவுபடுத்தற்கு அன்றோ. அனைத்துக் குறளும் யாத்தவர் வள்ளுவரே எனினும், இக்குறளகத்து, “யாம் எனத் தம்மைச் சான்று வைத்து மொழிந்தனர். இதுபோல் மொழிந்த சிறப்பிடங்கள் பின்னும் இரண்டுள. ஈண்டு பெறுமவற்றுள் என்னும் குறளை ஆராய்வோம்.

‘அறிவு அறிந்த மக்கட்பேறு என்னும் தொடருக்கு, அறிவு அறிந்த மக்கள், அறிவு அறியா மக்கள் என இரு நிலையார் உளர் என்றும், அவருள் அறிவு அறிந்த மக்கட்பேற்றையே யாம் அறிந்த பெரும்பேறு என ஆசான் விதந்து சுட்டுப என்றும் பலர் பொருள் கொள்ப. அதனினுங் காட்டில், “அறிவறிந்த என்றதனான், மக்கள் என்னும் பொதுப்பெயர் பெண் ஒழித்து நின்றது. இதனாற் புதல்வரைப் பெறுதலின் சிறப்புக் கூறப்பட்டது” எனப் பரிமேலழகர் வள்ளுவத்தின் அடிவேரினை விளக்கம் என்னும் வாள்கொண்டு அறுத்தெறிந்தார். பிற உரைகளினும் கொளத்தகும் பேருரை கண்ட இத்தமிழ்ப் பெருமகனார் காலக்கோட்பட்டு முரணி எழுதிய இடங்கள் இன்னும் சிலவுள. இவ்விடங்கள் ஆசற்றார் கண்ணும் தெரியுங்கால் வெளிறின்மை அரிது’ என்னும் இயல்புக்கு இலக்கியம் ஆயின. அத்துணையே யொழிய, திருக்குறள் போலும் அளவிற் சிறுமைத் தாய இவர் நுண்ணிய தெளிவுரை என்றும் கற்று நன்கு போற்றற்கு உரியது என்று அறிக.

மக்களுள் அறிவுப் பிறப்பும் உண்டு அறிவிலாப் பிறப்பும் உண்டு என்று பிறப்பு வேற்றுமை கொள்வது உம், அறிவு ஆண் இனத்துக்கே உரியது என்று பால் வேற்றுமை கொள்வது உம் எல்லாம் வளளுவ முரண்கள் ஆகும். இவ்வெல்லாம் ஒரு நாட்டுக் குடிமக்களுள் ஒவ்வொரு சாதிக்கே அறிவு ஊறும் என்றும், ஆண்மை பிறக்கும் என்றும், நாகரிகம் தெரியும் என்றும், பண்பு உண்டு என்றும் குறுகிய மனத்துச் சிறுகிய அறிவில் எழுந்த ஆகாக்