பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிவுப் பிறப்பு 13.5

குறையைப் பிறர் பழி யஞ்சி நிறைவு செய்ய இயலாது ஆதலின் பழியன்று’ என்று அறுதியிட்டார். உடற்குறை வாழ்வுக் குறையன்று என்று உள்ஸ்ரீத்தினார். பெற்றது கொண்டு அற்றது நிரப்பும் அறிவாற்றல் மக்கள் யார்க்கும் உண்மையின், அறிவு அறிந்து ஆள்வினை இன்மை பழி’ என்று பழிப்பிடன் சுட்டினார். உடற்குறை போல மக்கள் யாரும் பிறப்பில் அறிவுக் குறையினரோ எனின், அற்றன்று அறிவு உண்டு என்பதை அறிந்து அதனை ஆளாக் குறையே குறை என்று வற்புறுப்பான், ‘அறிவு அறிந்து ஆள்வினை இன்மை’ என ஆட்சியின்மையை விதந்து கூறினார். இதனானும் செயலே வள்ளுவம் எனச் செய்க.

ஒத்தவாய்ப்பும் தொழிலும் அளித்தால் முழுமெய் மக்கள் முன்னேறுவதுபோலத் தரம் சிறிதும் தாழ்வின்றிக் குறையுடல் மக்களும் முன்னேற்றம் காட்டுவர். ஏன்? நாம் காணும் நிறையும் அறையும் கேவலம் உடம்பு பற்றியதேயன்றி, அறிவு என்னும் உள்ளிடு பற்றியது அன்று காண். செல்வத்தாழ்வும் உயர்வும் வாழ்வுத் தாழ்வு வாழ்வுயர்வு என்று பொருளாகாதது போல, உடல் நிறைவும் குறைவும் அறிவு நிறைவு அறிவுக் குறைவு என்று பொருளாகாது. முழு மெய்யாளர்க்கே வாய்ப்பும் தொழிலும் வழங்க இயலா நிலையில் நாடும் அரசும் இருத்தலால், அறை குறையாளர் புறக்கணிக்கப்படுகின்றனர் என்பது அன்றி. அப் புறக்கணிப்பு நாட்டுக் குறை என்று கொள்ளப்படும் அன்றி, மக்களாய் உறுப்பற்றுப் பிறந்தார் யாரும் அறிவற்றவர் என்று வேரறப் பேசற்க. உறுப்பிலிகட்குச் செய்வினை இல்லை எனவும், அன்னோர் இரத்தல் வேண்டும் எனவும், அன்னோர்க்கு முதற்கண் ஈகை செய்க எனவும் திருக்குறள் விதித்தது உண்டா நினைமின் இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின் (1062) என்றும், வறியார்க்கு ஒன்று ஈவதே ஈகை (221) என்றும் பொதுப்படவே கூறக் காண்கின்றோம். மக்கள் வாழ்வுக்கு நிறையுடலை அரிய பெருந்துணை என்றோ குறையுடலைத் தடுப்பரிய இடையூறு என்றோ கோடல் வள்ளுவம் அன்று. பெற்ற உடம்பு முழுதாகுக, பழுதாகுக. அஃது ஒர் பொருளன்று. நல்வாழ்வுக்கு அறிவாட்சியே அடிப்படை என்பது வள்ளுவம்.