பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
மாணிக்கமாமலை


முனைவர் சோ.ந. கந்தசாமி
{{|தலைவர், இலக்கியத்துறை, தமிழ்ப் பல்கலைக்கழகம்}}
 

சான்றாண்மை போற்றும் தமிழ்ப்பெரும! கற்றோருள் தோன்றாண்மை மிக்க சுடர்ப்பரிதி கொள்கையினில்
எள்ளளவும் மாறாத ஏந்தலே! எந்தமிழ்தான்
உள்ளளவும் வாழும் உரம்மிக்க பேராசான்!
மக்கட் பெயரெல்லாம் மாத்தமிழின் நற்பெயராய்
ஒக்கவைத்த பற்றாள! உண்மைத் தமிழ்த்தொண்ட
கல்லா இனம்எல்லாம் கற்கவைத்த வேள்என்றே
எல்லோரும் ஏத்தஎழில் அண்ணா மலைமன்னைச்
சொல்லெடுத்துப் பாடிய தூயோனே! நின்னிடத்தில்
ஒல்லும் வகையால் உணர்வுபெற்ற மாணாக்கர்
வெல்லும் வகையால் வினைபுரிந்த ஆசான்மார்
பல்லோரும் போற்றப் பணிபுரிந்த மூதறிஞ!
மாணிக்க மாமலையே! மாட்சியுறும் ஆராய்ச்சி
பேணிப் பலபனுவல் பைந்தமிழ்த்தாய் ஏற்றிடவே
காணிக்கை வைத்த கவினார் தமிழ்க்களிறே!
ஆணிப்பொன் ஒத்த அருந்தமிழ்க்கு இன்னலெனின்
ஒடிப்போய் முன்நின்றே உண்மைக் குரல்கொடுக்கும்
பாடி மறவனே! பால்போல் மனத்தோனே!
தன்மானம் ஓங்கத் தமிழ்ப்புலவன் வாழ்வதற்கு
முன்மானம் காத்த முதல்வனே! நற்சிறாஅர்
தாய்தமிழே வாயிலாய்த் தாழ்விலாக் கல்விபெற
வாய்மை இயக்கம் வளர்த்த தமிழ்மகனே!
உள்ளுதொறும் உள்ளுதொறும் ஒங்கும் உணர்வளிக்கும்
வள்ளுவமும் கம்பரும் வளர்தமிழ்க் காதலுமே
ஆய்வுநெறிக்(கு) ஆணியாய் ஆன்றோர்க்(கு) அருவிருந்தாய் தேய்வறியாச் செல்வங்கள் செந்தமிழ்க்குத் தந்தவனே!
எண்மையனே திண்மையனே! எண்ணம் சிறந்தவனே!
அண்ணா மலையில் அடிவைத்தற் (கு) அஞ்சியே
கண்ணார் கதிரேச மாமணியைக் காலன்தான்
அண்டர் உலகுய்த்த அற்புதத்தைக் கம்பனின்
பண்கொண்டு போற்றுவோய்! பார்க்கில் அதுநெறியாய் விண்கொண்டு சென்றானோ வீரமிலாக் காலனுமே!
மீண்டுமொரு சங்கப் புலவனை மேதையினை
யாண்டுபோய்க் காண்போம் இனி.