பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிவுப் பிறப்பு 143

ஒரு நிலையான், என்றும் அந்நிலையவனே என்று முழு மூச்சாகத் துணிந்து கொள்வது மூடநம்பிக்கை எனப்படும். முழுதற ஆய்ந்து பார்க்கும் திறப்பாடும் முயற்சியும் மக்கள் பலர்க்கு இல்லை. மேலும் இத்தொல் பேருலகத்து நம் வாழ்க்கையைப் பிணிக்கும் ஒவ்வொன்றையும் ஆராயப் புறப்படுவது சாகப் புறப்படுவதாகவே முடியும்; வாழ்வாவது முழுதும் மாயமாய் மண்ணாவது உடனே திண்ணமாய் முடியும். ஆதலின், நம் வாழ்வுத் தொடர்புகள் பெரும் பாலும் நல்லன என்ற நம்பிக்கை கடைப்பிடித்தலல்லது ஐயவுணர்ச்சி அறிவாகாது. நம்பிக்கை வேண்டும் எனினும் நம்பிக்கை நம்பிக்கை தான் என்னும் அறிவு வேண்டும். மூடநம்பிக்கையை அறிவு என மயங்கலும் அந்த நம்பிக்கையை ஆராயவேண்டிவரின் அது செய்ய நடுங்கலும் அறிவுடைமை ஆகா. ஊசிக் கூர்மையும் குழவித் தூய்மையும் அவற்றோடு காற்றன்ன மடியில் இயக்கமும் அறிவுக்கு இன்றியமையாதன.

உழவர், மறவர், கொல்லர், தச்சர், கொத்தர், மருத்துவர் பெயர்கள் தொழிற்காரணத்தால் பிறந்தன. ஒருகால் உழுதவன் தன் தொழிலை விட்டால் உழவன் என்ற பெயர் அவனுக்குப் பொருந் தாது. காரணம் அழிந்தபோது காரணப் பெயரும் நீங்க வேண்டும். உழவன் மகன் மருத்துவத்தொழில் செய்தால் அவன் ‘மருத்துவன் எனப்படுவான்; உழவன் எனப்படான். இதுவே இயல்பாய அறிவுடைமை. உலகம் அறிவியக்கம் பெற்றிருப்பின், காரண நிலைக்கு ஏற்பப் பெயர்களும் மாறிச் செல்லும். உழவன் முதலாம் காரணத் தொழிற் பெயர்கள் இன்று சாதிப் பெயர்களாய் இடுகுறிகளாய்ப் பொருள் இழந்து நிற்கின்றன. தமிழ்மொழியை அறிவுக்குப் பொருந்தியதாகவும், தமிழகத்தை அறிவோட்டம் உடையதாகவும் நம்முன்னோர் காத்து வந்தனர். அவ்வறிவுக் காப்பினை நாம் பல படியான் இழந்தோம். அகலும் தொழிற்பிரிவை அசையாப் பிறப்புப் பிரிவாக மாற்றிச் சீரழிந்தோம். அதனால் பலவாய் இழிந்த பழமொழிகள் வையப் பிறந்தன. பழமை நினைந்து பயனென்? -

இன்று நமக்கும் ஞாலம் அனைத்திற்கும் வேண்டுவது அறிவுப் புதுவோட்டம்: காரணவாழ்வு; பழக்க வயத்தால் சென்ற தடத்துச்