பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிவுப் பிறப்பு 145

ஒருவர் நம்பாது வாழ வேண்டும் என்று கருத்துக் கொள்வது பெரும் பிழை. அறிந்துவாழ்க என்பதுவே வள்ளுவம். மாற்றுநிலை யுண்டா? முன் நிலையே இன்றும் உண்டா? என்று உண்மை அறிந்து கொள்ள வேண்டும் என்பதுவே பொருள்.

நன்னிலைக்கண் தன்னை நிறுப்பானும் தன்னை நிலைகலக்கிக் கீழிடு வானும் - நிலையினும் மேன்மேல் உயர்த்து நிறுப்பானும் தன்னைத் தலையாகச் செய்வானும் தான் என்னும் நாலடிப் பாடல் நன்னம்பிக்கைப் பாடல் ஆகும்.

மக்கள் தாமே தம் நிலையை உயர்த்திக் கொள்ளவல்லர் என்ற காட்சியால் அன்றோ, ‘உள்ளுவது எல்லாம் உயர்வு உள்ளல் (596) என மேல்நிலை காட்டினார். தம் தாழ்நிலையைத் தாமே அகற்றிக் கொள்ளவும் மாட்டுவர் என்ற துணிபான் அன்றோ, “உள்ளற்க உள்ளம் சிறுகுவ: (798) என நிலைப் பெயர்ச்சி சுட்டினார். அச்சமும் புறங்கூற்றும் அழுக்காறும் உடைய கயவன், அஞ்சாது புறங்கூறாது அழுக்காறு படாது ஒழுகுவனேல், அப்பெயர் ஒழியச் சான்றோன் எனப்படுவான். கல்லாதவற்றைக் கற்றாற் போல் பறைசாற்றி அறிஞர் சொற்கேளாப் புல்லறிவன், கற்றவற்றை விரித்துரைத்துப் பிறர் நல்லுரைக்குச் செவிசாய்ப்பானேல், புன்மைப் பெயர் ஒழிய அறிஞன் எனப் பெயர் பெறுவான். நிலைமாற்றத்துக்கு ஒப்ப இன்னான் எனப் பெயர் மாற்றமும் உடன் செல்லும்; செல்ல வேண்டும் என்று எண்ணி, வள்ளுவ அறிஞர் திருக்குறள் நூலில் காரணங் காட்டும் தன்மைப் பெயர்களையே ஆளுவர்.

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர் செயற்கரிய செய்கலா தார் (26)

என்ற குறளில் பெரியர் சிறியர் என்பன ஒருவர்ச்சுட்டாது இலக்கண வகையான் தோன்றிய காரணப் பெயர்கள். பெரியார் எனா சிறியர் எனா மக்கட் பிறப்பில் ஒரு பகுப்பு இன்று என்பது வள்ளுவம். பெரியராயினார் இழிந்த செயல்களைச் செய்வாரேல் சிறியர் ஆவர். சிறியராயினார் தம் சிறுமை நீங்கி அரியன செய்வாரேல் பெரியர் ஆவர். ஒருவரே ஒருகால் பெரியராயும் மறுகால் சிறியராயும் மாறிச் .1Q.