பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/170

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166 வள்ளுவம்

எனப்படாது. ஏன்? கணித்துணர்தலே அறிவின் தொழில், தன் வாழ்நிலை சூழ்நிலை காலநிலைகளுக்குப் பொருந்துங்கொல்? செயற்படுங்கொல்? எனக் கற்ற கேட்ட கருத்துக்கள்மேல் ஒர் எதிர்நோக்குே பாய்ச்சவேண்டும். இங்ஙன் அளவு மறித்து ஒடுவதால், பெரியோர்தம் சொல்மேல் அவநம்பிக்கை என்றோ ஐயுறவு என்றோ குறை கூறற்க. யார் தரினும் பணத்தை எண்ணிப் பார்த்து வாங்கு கின்றோம். சரி பார்க்கிறாயே, என்மேல் நம்பிக்கை யில்லையா என்று இயல்புடையார் கேளார். “நீயும் ஒருமுறை எண்ணிக்கொள் அப்பா யார்க்கும் வழுக்கு உண்டு என்றுதான் நாணயம் சிறந் தாரும் வலியுறுத்துவர். இஃது ஒழுங்கியல். தாங்கள் மொழிந்த வற்றை எழுத்து விடாமல் அப்படியே தலைக் கொண்டேன்’ என்றால் அதனைச் சான்றோர் உவவார். நீயும் உன் அறிவுகொண்டு உண்மைகாண் என்றே யாப்புறுப்பர். சொல்லியவர் திருவள்ளுவர் என்பதற்காக, அவர் கூற்றை ஆய்வின்றி ஒப்பக் கடமைப் பட்டிலம், இவ்வறிவுப் பெருமிதம் திருக்குறள் கற்பார்க்கு வேண்டும். வன்புறையில்லாமலே மக்களைக் கட்டுண்ணும் ஆற்றல் சான்றது உண்மைப் பொருள். வள்ளுவர் உரைத்தனவும் கற்பவர்தம் ஆராய்வுக்கு உரியனவே என்ற குறிப்பு, யார் யார்வாய்க் கேட்பினும் என்ற குறளகத்துக் கிடக்கின்றது. பசும் பொன் உரைதொறும் தானும் ஒளிசிறந்து கட்டளைக் கல்லுக்கும் ஒளிமிகுக்குமாப்போல், திருக்குறள் அனைய மெய்ப்பொருளை ஆய்தொறும் உண்மையும் முன்னையினும் ஒளிறும் அதனைத் தாக்கிக் கணிக்கும் வினையிடை நம் அறிவும் இலங்கும். இத்தீட்டுவினை யின்றேல் நம் அறிவொடு பெரியோர்தம் உண்மையும் துலங்கா. ஆதலின் ஆராய்வது அவநம்பிக்கை என்னற்க: அறிவொளி என்று ஆய்க.

சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ நன்றின்பால் உய்ப்பது அறிவு (432)

என்பது அறிவு ஒய்வு ஒழிச்சலின்றி, வாழுங்காறும் விழிப்பொடு தீட்டிக்கொண்டு இருக்கவேண்டிய பிறிதோரிடம். கார் மிதிவண்டி முதலாய ஊர்திகளில் உள்ள அடக்கியின் பயன் என்னை? ஒட்டத்தின் வேகத்தை வேண்டியவளவு மேற்கொள்ளற்கும், பிறவுயிர்க்கும் ஒட்டி தனக்கும் ஊறுவரின் விலக்கி நன்னெறிக்கண்