பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/174

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170 வள்ளுவம்

மறுவில் செய்தி மூவகைக் காலமும்

நெறியின் ஆற்றிய அறிவன் என்றார் தமிழ் முதல்வர் தொல்காப்பியர். இறப்பும் நிகழ்வும் ஆகிய கல்வி நிலைக்களத்தினின்று, மெய்யான எதிரது உய்த்துணர வல்லுநரே அறிவர் ஆவர்.

நீடிய வருங்காலத்தை முன் எண்ணுதல் அளவில், அறிவின் இலக்கணம் நின்றுவிட வில்லை. அங்ஙன் எண்ணுவது பிறழா திருத்தலும் வேண்டும். செம்மை தழுவிய மயக்கமில் எதிருணர்வே மெய்யறிவு எனப்படுவது. மக்களுள் எத்துணைச் சால்பினரும் முற்றிய மெய்யறிவுடையவராகக் காணோம். கூர்த்த அறிஞர் என ஞாலப் புகழ் பெற்றாரும் சிலபல கால் பிழைப்பக் காண்கின்றோம். நாட்டின் செலவினைக் கணித்தறிந்த இந்திய முதல்வர் காந்தியடிகள் அறப்போர் துவங்கினார். செளரி செளரா என்னும் இடத்து எதிர்பாரா வகையாய் மறக்குற்றம் நிகழ்ந்தது கண்டு, அறப்போரைத் திடீரென நிறுத்தினார். தம் கணிப்பு பிழை என்றும், அறப்போர்க்கு இந்தியா பக்குவம் எய்திற்றிலது என்றும் மெய்யுணர்ந்தார்.

கற்றதனால் ஆய பயனென்கொல்? வாலறிவன்

நற்றாள் தொழாஅர் எனின் (2)

என்றபடி, வாலறிவுத் தொழுகை நம் பிறப்பு வள்ளுவம். உள்ளன கற்றதன் பயன் உறுவதை மயக்கமின்றி அறிதல் என்னும் மெய்ப் பொருட் கொள்கையை, மக்கட் பிறப்பினர் யாரும் மறார். ஒன்றில்லார் அதனைப் பெறுதற்கு உடையாரைச் சார்தல் உலகியல்பு. இறைவனை வாலறிவன் என்று அறிமுகப் படுத்திய தனால், மருளறிவினராகிய நாம் அவனை வணங்குதொறும் இடையறாது எண்ணுதொறும் தூயவறிவு ஊறப் பெறுவோம் என்பது வள்ளுவர் நெஞ்சம் ஆயிற்று. வாழ்வின் குறிக்கோள் மாசில் மெய்யுணர்வு பெறுகை என்னும் திண்ணிய எண்ணக் கொழுந்தினையே, வாலறிவன் நற்றாள் தொழல் என உருவகஞ் செய்தார். இறையுண்மை கண்டவர் என்பதற்கு. ஒருவர் தம் பொய்யில் அறிவே மெய்ச் சான்றாகும். தூயவறிவு தேடாதவர் இறைக் கொள்கை சாற்றினும், தம் செயலால் அதனை மறுப்பவர்