பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/181

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குடும்ப வாழ்க்கை 177

கடைபோகாது என்று அறியவரின், தன் நெஞ்சு அறியப் பொய்த்து வாழாது, பிறர் நகைப்பர் எனப் பொய்ம்மானம் பற்றாது துறவு உதறி, உண்மையை விளம்பி, மணந்து வாழத் துணிய வேண்டும். பிறவியூட்டம் வேடத்தாலும், வெற்று ஆரவாரத்தாலும் சிறிதும் குறையாது என்பது வெளிப்படை. பால்வழிச் செல்லாப் பிறவி யாற்றலை, மனம் நிறைந்த ஒரு குறிக்கோள் வழிச் செலுத்தல் வேண்டும். உலக நலன், நாட்டு நலன், குடிநலன், மொழிநலன், உயிர் நலன், ஏழைநலன் என்ற வகையில் ஒன்று பல மேற்கோடற்கு உரியன. காமத்தால் கலக்குறும் மனத்துக்குத் தூய குறிக்கோள் ஒரு பற்றுக்கோடு ஆகும். கோள் அற்ற துறவு முடிபு எய்தாது. “ஒழுக்கத்து நீத்தார் பெருமை (21) என்றபடி, ஒழுக்கம் சான்ற அடிப்படையில் பூணும் மெய்த்துறவு - முற்றிய தன் அவிவு - வரவேற்கத் தகும். அஞ்சாமையும், பொய்யாமையும், அரிய செய்கையும் பிழையாது, காமம் நீத்த துறவிகள் சிலரேனும் வாழும் நாட்டுக்கு, அதிர வருவதோர் சூறாவளி இல்லை. இத்துறவு இருபாலார்க்கும் உரித்து. நிற்க.

இல்லறம் இயல்பு நெறி என்றாலும் விலங்குநெறி யன்று: செய்தற்கு எளிய நெறியும் அன்று. வாய்மை யொழுக்கம் இயல்பான தூயவழி என்றாலும், அதனைக் கடைப்பிடித்தல் கிள்ளுக் கீரை யன்று என அறிவோம். ரூபாய் பத்து நம்பால் ஒருவர் வேண்டும்போது, என்னிடம் ரூபாய் நறுவிதாய் இல்லை. யானும் யாரிடமாவது பற்றுக் கேட்க நினைத்திருக்கிறேன்’ என்று சொல்லி விடல் எளிது. இப்படித்தான் பலர் தம் நெஞ்சு அறியப் பொய்யறைப. இங்ஙன் பொய்படாது, ‘நீ முன் என்பால் வாங்கிய கடன் தொகையை இன்னும் தராத நிலையில் மறுபடியும் கடன் கேட் கிறாயே என்றவாறு உண்மையை நானும் நாகரிக நடையில் உரைப்பார் எத்துணைப்பேர் மெய்ம்மைக்கு அறிவும் செயற் றுணிவும் வேண்டுமாப் போல், இல்லறத்துக்கும் சிறப்பாகக் குடும்ப அன்பும் அதனை நடத்தும் அறிவும் வேண்டும். ஆண் பெண் கூட்டுறவு மட்டும் இல்வாழ்வு ஆகாது காண். ‘அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் (46) இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் (47) வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் (50) என்ற

2-12).