பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/186

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182 வள்ளுவம்

வேட்டபொழுதின் அவையவை போலுமே (1105) என்று காதலர் வாய்ச் சொற்களில் வைத்து வெளியிட்டனர். - திருக்குறள் பல நிலையறம் கரைவது என்று முன்னர்க் கூறினேன். அவ்வுரை அறத்துப்பால் பொருட்பால் அளவில் ஒக்கும். காமத்துப்பால் இன்பத் துறைக்கண் ஒருநிலை யறம் சுட்டுவது. மக்களுயிரின் மெய் வேட்கையை, அஃறிணைபோல் பல் வழிப் படுத்தாது. ஒரு வழிப்படுத்துவது - ஒரு குடியாக்குவது - வள்ளுவம். யார்க்கும் அஞ்சா, யாதும் இழவா, என்றும் நீங்கா, ஆழ்ந்தகன்ற இன்ப நுகர்வுக்கு உரியநெறி இருபாற்கும் கற்புநெறி என்பது வள்ளுவம். ஆதலின் காமத்துப்பால் உயிருடையார் யாரும் கற்றற்கு உரியது; வாழ்வு வேண்டுவோர் யாரும் ஒழுகற்கு உரியது.

காமம் இயல்பு என்பதற்காக, அதனைத் துய்க்குமுறை கல்லாதே தோன்றும் என்பது பிழை. இணை விழைச்சு எல்லா உயிர்க்கும் பொது. மக்கள் அல்லா ஏனைவுயிர்க்குக் காமநூல் கற்கும் பேறு இல்லை. அப்பேறு உடைய மக்களும் கல்லாதே காம நுவர்வரேல், அது அஃறிணையோடு ஒப்பப் பொது நுகர்வாகும். வள்ளுவர் அனைய சான்றோர் மனவுணர்வு கண்டு எழுதிய தூய காமப்பனுவல்களைக் கற்று, பருவ நம்பி நங்கையர் இன்பப் பாயல் துயில்வரேல், அத்துயில் அறிவுத் துயிலாகும்.

மலரினும் மெல்லிது காமம் சிலர்.அதன் செவ்வி தலைப்படு வார் (1289)

என்பது ஒரு காமக்குறள். இல்லறத்தார் பலர் இன்பம் நுகர அறிகிலர் என்றும், அறிந்து முழுச்சுவை காண வல்லார் சிலரே என்றும், காமவுணர்ச்சியின் நுண்ணிய மென்செவ்வி நினைத்தற்கு உரியது என்றும் இக்குறள் கூறும். காமக் கல்வி அறியாராய், வேட்கை மீதுர்ந்த காமப் புணர்ச்சி,

தேனுடைந்து ஒழுகும் செவ்வித் தாமரைப் போது புல்லி ஊனுடை உருவக் காக்கை இதழுகக் குடைந்திட் டாங்கு என்றபடி இழித்துரைக்கப்படும். தமிழ் இயற்கை மொழியாதலின், காமம் உலகியல்பு என்று துணிந்து, ஐந்திணை என்னும் அகத் திணையை வகுத்துக் கொண்டது. சங்கத் தொன்னூல்களுள் பின்னர்த் தோன்றிய சிலபெரு நூல்களும் ஒருமனை வாழ்க்கை