பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/194

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19 G வள்ளுவம்

வினை, துவைப்பு வினை, மழிப்பு வினை. அடுப்பு வினை என்றினையன நாட்டிற்கு வேண்டா: தலைமை வினை, அமைச்சு வினை உறுப்பு வினை. படைவினை என்றினையவே நாட்டிற்கு இன்றியமையாதன என்று சொல்லப் படுங்கொல் உலகிற்கு வேண்டிய தொழில்களுள் சிறப்பென இழிவென ஒன்றின்று. அவ்வினையைச் செய்யும் திறத்தாற்றான் சிறப்பும் இழிவும் தோன்றும் என்ற கருத்தால், சிறப்பு ஒவ்வா செய் தொழில் வேற்றுமையான் (972) என்றார். கணவனும் மனைவியும் தத்தங் குடும்பப் பொறுப்பை ஆற்றுங்காலை, இருவரும் உயர்ந்தோராவர். ஆற்றத் தவறியவர் தாழ்தோராவர். ஆதலின், மதிப்பளக்கும் கோல் கருமச் செய்கை என்பது வள்ளுவம்.

குடித்துறை அறிஞர்களே இல்லப் பொறுப்பு பெண்ணைச் சார்ந்தது என்பது தமிழர் செய்த பகுப்பு. இல்லாள் மனைவி என்ற சொற்களே கரி. இக் கருத்தானன்றே, வாழ்க்கைத் துணை நலம். என்ச் சிறப்பதிகாரம் செய்தார் ஆசிரியர். வாழ்க்கை எனை மாட்சித் தாயினும் இல் (52), இல்லவள் மாணாக் கடை உள்ளது என் (53) என்ற குறட்பகுதிகளால். குடும்ப வாட்சிக்குத் தலைவியின் மாட்சி இன்றியமையாத முதன்மைத்து என்பது பெறப்படும். பெண் தான் பிறந்தகச் சுற்றத்தாரை மதிக்கும் அன்பு நோக்கத்தோடு. கணவன் பிறந்த குடிச் சுற்றத்தாரையும் மதித்து அணைக்க வேண்டும். இவ்வறிவுப் பண்பினைத்தான் மனைமாட்சி என்றும், ‘இல்லவள் மாண்பு என்றும் யான் அடிக்கடி எண்ணுவதுண்டு.

மக்கட்குப் பெரியோர் துணை, மாணாக்கர்க்கு ஆசான் துணை என்பது போல, ஆணுக்கு வாழ்க்கைத் துணை எனப் பெண்ணைச் சிறப்பித்தார். இதனால் மனைவி கணவனுக்கு அமைச்சி ஆவள் என்பது போதரும். கண்ணகி கற்பு என்னும் திண்மை யுடையவள்; பெண்ணிற் பெருந் தக்கவள்; தெய்வம் தொழாதவள்; தற்காத்தவள்; தற்கொண்ட கோவலன் ஒழுக்கம் பேணியவள் அல்லள்; தகைசான்ற சொற் காத்தவள் அல்லள். மனைவியாகத் தன்னைப் பெற்ற கோவலனை, பெற்றாற் பெறின் பெறுவர் (58) என்றபடி, தனக்கே உரிய கணவனாகப் பெற்றவள் அல்லள். நிரம்பிய மனைமாட்சி யுடையளாய் இருந்தும், அதனை வேண்டுங்கால் துணிந்து ஆட்சிப்