பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/197

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குடும்ப வாழ்க்கை I 93

வளர்க்கும் மருதப் பெண்ணினம் பெறுக, பெறுக என்பது திருக்குறட் சுட்டு.

“குடும்ப வாழ்க்கை’ என்னும் தலைப்பின்கண் இத்துணை நெடும்பொழுது, மெய்த்துறவு, குடும்பச் சிறப்பு, குடித் தோற்றம், ஒருமனையின்பம், கணவன் மனைவி இயல்புகள் பற்றி வேண்டு மளவு விரித்துரைத்தேன். இனி ஒரளவு, பெற்றோர்க்கெல்லாம் இன்பூட்டும் வள்ளுவர் பிள்ளைப் பேச்சைக் கேண்மின் !

உடம்புபோல் சட்டையையும் ஒர் உறுப்பாகக் கொள்வது இற்றைய உலக நாகரிகம். குழந்தைக்கு மெய்ப்பை அணிகின்றோம். நாமும் மெய்ப்பை புக்குக் குழந்தையை அணைக்கின்றோம். இத்தழுவல் சட்டைக்கு இன்பமேயொழிய, உடம்பிற்கு இன்பம் அன்று. குழவியின் மேனியொடு நம் மேனி படவேண்டும்: மெய்யின்பத்துக்கு -l@ பொருள் கூடாது என்று காட்டுவாராகி, மக்கள் மெய் தீண்டல் உடற்கு இன்பம் (65) என ஒரு பொருள் இருசொற் பெய்தார். இஃதோர் ஊற்றின்பம். அவர் சொற் கேட்டல் இன்பம் செவிக்கு (65) என்பது கேள்வியின்பம், சிறு க்ை அளாவிய கூழ் அமிழ்தினும் ஆற்ற இனிதே’ (64) என்பது காட்சி கலந்த ஊணின்பம். இக்குழவிச் சுவைகள் நீடித்து நிற்பனவல்ல; பருவத்தோடு மறைவன என்ற கருத்தால் உடற்கின்பம்’, செவிக்கின்பம் எனப் புறவளவோடு நிறுத்தினார். இப்புறச் சிறு இன் பவுணர்ச்சியும்கூட, பிறருடைய குழந்தைகளின் மெய்யைத் தீண்டுவதால், சொல்லைக் கேட்பதால் தோன்றுவதில்லை என உலகியல்பு கண்ட வள்ளுவர், தம் மக்கள் சிறு கை அளாவிய கூழ், (64), தம் மக்கள் மழலைச் சொற் கேளாதவர் (66) எனத் தம் உறவு சுட்டினார். உடல் செவி இன்பம் போலாது, தம் மக்களால் பெறத் தகும் நீடித்த இனிமை ஒன்றுண்டு; அவ்வினிமை தானும், பெற்றோர் அளவில் அடங்காது உலகத்துப் பிறவுயிர்க்கெல்லாம் பயன்படும் என்று துணிந்த உண்மை காட்டுவாராகி,

தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து மன்னுயிர்க் கெல்லாம் இனிது (68)

என ஒரு குறள் யாத்தார். 2). 2,