பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/198

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194 வள்ளுவம்

மக்களின் அறிவாக்கமே பெற்றோரின் வளர்ப்பு நோக்கம் என்பது குழந்தை வள்ளுவம். இந்நோக்கம் மக்கட் பேறு உடையார்க்கு எல்லாம் கைகூடுவது. பிள்ளைகளை அறிவுடைமைப் படுத்தாது பொருளுடைமைப் படுத்துவதே இன்று பெற்றோரின் பெருநோக்கமாகக் காண்கின்றோம். இப்பொருட்பற்றால் பெற் றோர்க்கும், பிறந்தோர்க்கும் அடிக்கடி பல பூசல் நிகழக் காண்கின்றோம். முதிர்ந்த தாய் தந்தையரை அவர்தம் மக்கள் முற்றும் புறக்கணிக்கக் காண்கின்றோம். பெற்றோரினும் அவர் ஈட்டிய பொருள் மேல் மக்கள் குறிபார்க்கக் காண்கின்றோம். இவ்வெல்லாம் செல்வக்கண் கொடுத்து வளர்த்த வளர்ப்புக் குற்றம்; தம்மினும் தம் மக்கள் பொருளுடையர் ஆதல் வேண்டும் என்று பற்றிய வள்ளுவ முரண். தம்மின் தம் மக்கள் அறிவுடைமை என்பது பெற்றோரின் குறிக்கோள். அறிவுடைய தாய், தந்தை தம் மக்களைத் தம்மைக் காட்டிலும் (செல்வராய் அன்று) அறிவினராய்ச் செய்வர் என்ற உயர் நோக்கத்தை இக்குறளால் அறிகின்றோம்.

குழந்தை குடும்பத்துக்கு இன்றியமையாப் பொருளா? மக்கட்பேறு இல்லா இல்லறத்தார் வாழ்வு இழந்தவரா? குடும்ப நோக்கம் குழந்தைப் பயன்கொல் இது பற்றி வள்ளுவர் கருத்து யாது? இன்றியமையாப் பொருள் எனின், அது மணந்தார் யாரும் எய்தக் கூடியதாதல் வேண்டும். எளிதில் எய்த வாராவிட்டாலும், முயற்சிக்கேனும் எய்தலாவதாய் வரல்வேண்டும். அவ்வரவும் ஒழுக்கம் உடையதாதல் வேண்டுங்காண். இவ்வடிப்படையில் நின்று ஆராயும் போது, உடலணி போலக் குழந்தை இல்லணி செய்யும் சிறப்புப் பொருளேயன்றி, உறுப்புப்போல் இன்றியமையாப் பொரு ளன்று என்பது பெறப்படும். மனையின் நன்கலம் நன்மக்கட் பேறு (60) என்பர் வள்ளுவர். கற்பொழுக்கம் வலியுறுத்தும் ஆசிரியர் இன்றியமையாதது மக்கட்பேறு என்று சொல்வார் என எதிர்பார்க்கலாமா?

இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு (81) என்றபடி வேளாண்மை - பிறவுயிர்க்கு நல்லது செய்கை - குடும்ப நோக்கம் என்பது குடிவள்ளுவம். ஆதலின், மக்களை