பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/208

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20.4 வள்ளுவம்

திருக்குறள் அரசன்தன் ஆடை அணி இருக்கைகளையோ அவன் நுகரும் புறப் பொருள்களையோ கூறவில்லை. அமைச்சன் தூதன் படைத்தலைவன் எனப் புறத்துறுப்புக்களையோ, போர்க் கருவி களையோ எண்ண வில்லை. காலந்தொறும் வேறுபடும் ஆடம்பரங்களையோ நாட் கரணங்களையோ குறிக்கவில்லை. இவ்வெல்லாம் எழுதியிருப்பரேல், வள்ளுவரின் அரசியல் வழக்கொழிந்துபோம். வீட்டுக்குக் கல்லும் மண்ணும் வேண்டும் என்று கூறாமல், காற்றோட்டமும் ஒளியோட்டமும் வேண்டும் என்று கூறுமாப் போல, வள்ளுவர் அரசியற்கு என்றும் இன்றியமையாச் சிறப்பியல்புகளையே பொறுக்கி யுரைத்தனர்; நல் லடிப்படை களையும் அரசழிக்கும் தீயவற்றையும் விதந்தோதினர்.

உலகம் ஒன்றெனச் சாற்றும் நம் கூற்று செயற்பாட்டில் நீள் கானலாகவே தோன்றுகிறது. உலகம் நாடு நாடாகப் பிரிந்து அரசுப்படுவது. எவனும் உலகமகனாகப் பிறக்கவில்லை; ஒரு நாட்டு மகனாகவே பிறக்கிறான். நாடு என்பதுவே ஆசான் வகுத்த இடவரம்பு. ஞாலம் பன்னாடுகளாக அமைந்து கிடப்பது. இனி மாற்றற்கு இயலா முடிவு என்ற கருத்தால், உலக வதிகாரம் செய்யாது, நாடு அதிகாரம் செய்தார், நாடு என்ற இடப் பிரிவியல் உலகவொருமை முற்றினும், செயலாட்சிக்கு இருந்தே தீரும். நாடு கண்ட வள்ளுவர் மக்களினம் ஒத்து வாழ, அரசமைப்பு மிக மிக இன்றியமையாதது என்ற தெளிவால்,

ஆங்கமைவு எய்தியக் கண்ணும் பயமின்றே வேந்தமைவு இல்லாத நாடு (740) என, நாடு அதிகாரத்து அரசதிகாரம் வேண்டினார். .

வேந்துரிமை பிறப்புரிமை என்ற கருத்திற்குத் திருக்குறளிற் சிறு குறிப்பும் இன்று. பிறப்பால் அரசனாவதைக் கண்டவரே யாயினும், பிறப்பியலை அரசியலாகக் கொண்டாரல்லர். நாட்டுக்கு ஒரரசு வேண்டும்; அரசுக்கு ஒரு தலைவன் வேண்டும் என்பது வள்ளுவம். தலைவன் வரவு பிறப்பால் அமைக: தேர்வால் அமைக; பிற முறையால் அமைக. அவன் வருவழி பற்றிக் கவலையில்லை. எவ்வழியானும் அரசேற்கும் தலைவனைப் பற்றியே ஆசான் கவலை