பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/209

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவ அரசு 205

கொண்டார். அரசன் வருவழி பேசாது. இறைமாட்சி அதிகாரத்து

அவனுக்கு அமைய வேண்டும் அரசியல்புகளையே பேசினார். தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும் - நீங்கா நிலனாள் பவற்கு (383)

என்பது எஞ்ஞான்றும் ஒரு நாட்டுத் தலைவனுக்கு உரிய இலக்கணம் அன்றோ?

இடம் பரந்த ஒரு நாட்டின் அரசுக்கு, வினைத் துணிவு செய்யும் ஒரு பெருந் தலைவன் வேண்டும். இத் தலைவனை வேந்தன், மன்னன், அரசன், இறைவன், காவலன் என்ற கிளவிகளால் திருக்குறள் அழைக்கும். அரசுபற்றி வள்ளுவர் ஆண்ட சொற்கள் வேறு; நாம் ஆளும் சொற்கள் வேறு. இங்ஙன் சொல் வேற்றுமை யன்றி, நாட்டுக்கு ஒரு தலைமை வேண்டும் அரசிலக்கணத்தில், குறளொடு நமக்கு வேற்றுமை யுண்டோ? வாழ்வாங்கு வாழ் பவனைத் தெய்வத்துள் வைக்கப்படும் (50) என உயர்த்தியும், புல்லறிவால் இல்லென்பவனை ‘வையத்து அலகையா வைக்கப் படும் (859) என இழித்தும் மொழிந்தாற் போல,

முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு இறையென்று வைக்கப் படும் (388) எனச் சிறப்பித்தார். மன்னவனாய்ப் பிறந்தானை இறைவன் என்னாது, முறை செய்து காக்கும் பண்புடையான் இறைவன் என மதிக்கப்படுவான் என்ற நடை நுட்பத்தை ஒர்மின். வேந்தனைக் கடவுளாகத் தொழுதலும் அங்ஙன் உரைத்தலும் பண்டைத்தமிழ் வழக்கு அன்று. இறை கடியன் என்று உரைக்கும் இன்னாச் சொல் (564), அருஞ் செவ்வி இன்னா முகத்தான் (565), வெருவந்த செய்தொழுகும் வெங்கோலன் (563), அறிகொன்று அறியான் எனினும் (638), முறை செய்யா மன்னவன் தண்பதத்தான் தானே கெடும் (548) எனக் கொடுங்கோலனை இழித்துரைப்பர் ஆதலின், அரசனைப் பிறப்பு வகையால் தெய்வமாக்கல் தமிழியல் அன்று எனத் தெளிக. அறிவறைபோகிய பொறியறு நெஞ்சத்து இறை’ என்றும், தேரா மன்னா’ என்றும், கண்ணகி வாயிலாய் இளங்கோவடிகள் கூறுவன ஈண்டு நினையத்தகும். கடவுளெனத்