பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/213

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவ அரசு 209

நாட்டு அன்பரீர் அரசு வள்ளுவங்களை யெல்லாம் முற்ற முடித்து ஈண்டுக் கூறல் என் கருத்தன்று கூறத் தொடங்கின், அது பல சொற்பொழிவாய் விரிந்து பெருகும். இன்றும் இனி வரும் காலத்திற்கும், குடியரசிற்கும், பிற எவ்வகை அரசிற்கும், அரசு என ஒரமைப்பு மன்பதைக்கண் உளநாள் வரையும், வள்ளுவர்தம் அரசுரிமைகள் பொய்யா என்றும், ஞாயிற்றுக்குக் கதிர் போல்வும் திங்களுக்கு நிலவு போலவும் அவை அரசுக்கு நின்று நிலைக்கும் அடிப்படைப் பண்புகள் என்றும், மெய்யுறுத்துவான் வள்ளுவ. அரசின் ஓரங்காட்டலே என் உட்கோள்.

வேந்தன், அமைச்சன், வினைசெய்வான் என வரூஉம் சொற்களில் அழுத்தங் கொள்ளாது. அவற்றை ஆற்றல் நிறைவு குறைவு தெரிக்கும் படிமுறைச் சொற்களாகவே நாம் பொருள் கொள்ளல் வேண்டும். தலைமைப் பதவி இருப்பினும், இந்தியத் தலைவனுக்கும் மாகாணத் தலைவர்களுக்கும் ஒளி - அஃதாவது அரசாற்றல் - இல்லை. அரசொளி இந்திய முதலமைச்சன் பாலும் மாகாண முதலமைச்சர்கள் பாலும் தங்கிக் கிடக்கின்றது. அமெரிக்கத் தலைவனும் இந்தியத் தலைவனும் ஆங்கில அரசியும் ஒரு நிகரான அரசொளி உடையவர்கள் அல்லர். ஆதலின் அமைச்சன் தலைவன் என்ற அரசியற் கிளவிகளில் பேரழுத்தம் வையாது ஒரரசின்கண் துணியும் முடிவாற்றல் யாவனுக்கு உண்டு, அவனைத் தலைவனாக வேந்தனாகக் குறிக்கொள்ளவேண்டும். எல்லாரும் இந்நாட்டு மன்னர் என்று ஒப்புக்குப் புகழினும், அரசியல் உண்மையை உணர்க. நாம் மிதிவண்டியில் விளக்கின்றிச் சென்றால், ttt நம்மைப் பிடித்து எழுதி வைத்துத் தண்டனை செய்வான். அவன் அங்ஙனம் செல்லக் கண்டால், நாம் யாதும் செய்ய ஒல்லுமோ? செய்தால் நம் வாழ்நாள் பின்னை இடையூ றின்றி இயங்க முடியுமோ? இருவர் தம்முள் அடித்துக்கொண்டால் அதன் கருத்து வேறு. ஒரு குடிமகன் ஊர் காவலனை அடிப்பானேல், அஃது அரசினைத் தாக்கியதாகப் பொருள்படும்; அரசே முன் வந்து வழக்குத் தொடரும். இதன் கருத்து என்னை? ஊர் காவலன் அரசாணை தாங்கியவன்; அரசு வினைஞன்: இம்மியளவேனும் அரசொளியுடையவன். ஓராற்றால் சிறு மன்னன் எனத் தக்கவன்.

24. H-.