பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/217

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவ அரசு 213

பகையென்னும் பண்பி லதனை ஒருவன் நகையேயும் வேண்டற்பாற் றன்று (871)

பகைநட்பாக் கொண்டொழுகும் பண்புடை யாளன் தகைமைக்கண் தங்கிற்று உலகு (874)

உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும் சேராது இயல்வது நாடு (734) நல்லாறு எனப்படுவது யாதெனின் யாதொன்றும் கொல்லாமை சூழும் நெறி (324)

என வரூஉம் பல் குறள்களும், அனைத்துத் தீமைக்கும் பிறப்பிடம் காட்டும் இகல் என்னும் தனியதிகாரமும் வானுயர் வள்ளுவ நோக்கங்கட்குச் சான்றாவன.

இமயமலை,யன்ன உயர்ந்த எண்ணங்கள் ஒரு பாலாக, உலகவொருமை சாற்றும் இற்றைய நடைமுறையை நோக்குமின்! வளமிலா நாட்டு மக்கள் வளமுடைய உலகப் பிறபகுதிக்குக் குடியேற ஒல்லுமா? செல்வம் கொழிக்கும் ஒரரசு, குடும்பம்போல் கணக்கு வழக்குப் பாராது, வறிய பிறிதோர் அரசுக்குப் பொருட் கொடை செய்வதுண்டா? தங்கு தடையின்றி ஒருவன் தன் வீடுபோல் உலக முழுதும் புறப்பாடு செய்ய முடியுமா? ஒரு நாட்டில் நிரம்பிய தொகையுடைய மக்கள் இருப்பரேல், ஒரு பகுதி மக்களைக் குடிகள் குறைந்த பிறிதொரு நாட்டிற்குக் குடியேற்ற இயலுமா?

உலகம் ஒன்றென நினப்பதைக் காட்டினும், ஒவ்வோர் இடத்தையும் உலகமென நினைத்தல் வேண்டும். மக்களை ஓரினம் என எண்ணுவதைக் காட்டினும், ஒவ்வொருத்தரையும் மக்களினம் என எண்ணல் வேண்டும். இங்ஙன் எண்ணுவதே செயலுக்கு வரும் அன்பு நெஞ்சம் ஆகும். கொரியப் போரை உன்னுமின் கொரியப் போருக்கு ஒர் தீர்வு காணாவிட்டால் அஃது உலகப் போராய் முடிந்து விடும் என்றும், மக்கட்யூடே அற்றுப்போம் என்றும் அரசியல் அறிஞர்கள் முழங்குப. கொரிய நாடும் உலகமே எனவும், அங்கு நடப்பதும் உலகப் போரே எனவும், கொரியரும் மக்களினமே எனவும், ஆங்கண் இன்று மக்கட்யூடு அற்றுக் கொண்டிருக்கின்றது எனவும், துடிப்புணர்ச்சி இன்னோர்க்கு இல்லை. எதிரிடும்