பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/220

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

216 வள்ளுவம்

பகையாகக் கருதி அறிவின்றி - இகலும்வரை, அச்சமும் நம்பாமையும் இருக்கும்; அவை யுளவரை, படைமாட்சி இருக்கும் படைப் பெருக்கு இருக்கும்வரை, வல்லரசு மெல்லரசு என ஆற்றற் பாகுபாடு இருக்கும்வரை, தானும் தன்னினமும் வஞ்சி மலைந்து வாகை சூடியேனும் அளவு கடந்து வாழ்தல் வேண்டும் என்னும் தற்பற்று இருக்கும் வரை. தலைவன் ஆதல் வேண்டும் என்னும் பேரவா இருக்கும் வரை, வள்ளுவர் வகுத்த. குறிக்கோள் நடைமுறை என்ற இரு வேறு அரசியலுக்கும் ஞாலத்தில் செவ்வியுண்டு. - எவ்வுயிரும் நோய்வாரா உடம்பு பெறுவதுண்டேல், மருந்து அதிகாரத்துக்கு இடனின்று. மக்களெல்லாம் ஒருவன் ஒருத்தி என்னும் தமிழ் ஐந்திணையொழுக்கம் பெற்றுக் காம வரம்புப் படுவரேல், பிறன் மனை நயவாமை, கூடாவொழுக்கம், வரைவின் மகளிர் அதிகாரங்கட்கு வேலையில்ன்ல. ‘இன்பத்துணை மட்டும் அல்லேன் வாழ்க்கைத் துணையும் ஆவேன்’ என மனைவி நடப்பாளேல், பெண்வழிச் சேறல் அதிகாரத்துக்குப் பேச்சு இல்லை. யாரும் விரும்பிய நலம் விரும்பியாங்கு எய்துவரேல், நல்குரவு இரவு அதிகாரங்கட்கு ஆட்சியில்லை. பிறரும் வாழ்க என்ற பெருமனம் சிறக்குமேல், பகைமாட்சி, உட்பகை, நன்றியில் செல்வம் அதிகாரங் கட்கு உயிர்ப்பு இல்லை. யாவரும் முற்றறிவு உடையர் ஆகுவரேல், புல்லறிவாண்மை பேதைமை முதலாய பல்லதிகாரங்கட்குத் தோற்றம் இல்லை. வஞ்சகம் ஒருத்தர் நெஞ்சகத்தும் இல்லா திருக்குமேல், யாவரும் தம் நெஞ்சு அறியப் பொய்யாது நடப்பரேல், இறை வணக்கம் என்பது பொய்யா ஒழுக்க வாழ்க்கை என்ற மெய்யறிவு கொள்வரேல். எத்துணையோ அதிகாரங்கட்கு இடனில்லைகாண். நிற்க, , , நம் கண்ணாரக் காண்பது என்ன? உலகம் நன்றுக்கும் தீதுக்கும் உரிய பொதுவியல்பு உடையது. மக்கள் மனம் தூய்மையும் மாசும் சார்தற்கு வாய்ந்த ஒரு பாற்படா அசைவுடையது. ஒவ்வொருத்தரும் மாசு படாது தூய்மை போற்றல் வேண்டும் என்பது வள்ளுவம், இஃதன்றி, நன்று தீது கலந்த உலகம் என்று எண்ணாது, ஞாலம் குறை அற்றது. குணம் ஒன்றே நிரம்பியது என்று வைத்துக்கோடல்