பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/225

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவ அரசு 221

என்பது ஆசான் உடன்பாடு. தன் தீய குடிகளை ஒறுப்பது அரசின் பொறுப்பு எனினும், அதனை ஆற்றல் எவ்வகையானும் எளிய இனிய செயல் அன்று. தீய குடிதான் எனத் தெளிவதும், தீமைக்கேற்ற தண்டனை விதித்தலும், அரசிற்குப் பெருந் தொல்லை வினை களாகும். ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் கோவலனைக் கள்வன் என மாறியுணர்ந்தான்; சிலம்புக் களவுக்கு உயிர் வாங்கினான்; அதனால் கோல் வடுப்பட்டான் என ஆட்சியிழுக்கை அறிகின்றோம். தலைவன் தற்காப்புக்குக் குடிகளையொறுப்பது வ்டு என்றும். நற்குடிக் காப்புக்குத் தீக்குடி கடிவது தொழில் என்றும் காட்டுவான், வள்ளுவர் யாத்த நடை நுட்பம் நினையத்தகும்.

தன்னாட்டுக் கொடுங் குடிகளை, அயல்நாட்டுப் பகைபோல அரசு கருதப்படாது. கருதி அளவிறந்து தண்டிப்பின் ஏனை நற்குடிகளுங் கூட அஞ்சும். தீய குடித்திருத்தமே ஒறுப்பின் நோக்கமாதல் வேண்டும் என்பது வள்ளுவம். நல்லாசிரியன் வகுப்பிற் குறும்பு இழைக்கும் மாணாக்கர்மேல் கறுவு கொள்ளான்; காலம் பார்த்து உள்வேவான்; வகுப்பு இயலுமாறும் அவர்தம் குறும்பு திருந்துமாறும் முறைசெய்வான். அரசாட்சி வகுப்பாட்சியை ஒப்பது.

தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால்

ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து (561) என்ற குடியொறுப்புக் குறளின்கண், சொற்றோறும் அன்பு ஒடுதல் காண்க. நீடு நினைந்து மிக்க விழிப்போடு யாத்த பா இது. தக்காங்கு, ஒத்தாங்கு என்ற கிளவிகள் வள்ளுவ அரசின் நேர்மை நாடிகள். குற்றஞ் செய்ய அஞ்சும் மனப்பதம் நாண் என்படும். நாணுடைமை மக்களுயிர்க்குச் சிறப்புக் குணம்; வாழ்க்கைக்கு வேலி. நாணறுந் தவன் யார்க்கும் எத்தீமையும் விளைவிக்கப் பின்வாங்கான். யாரொருவர் நானும் அறும்படி சொல்லுதலும் செய்தலும் பிறப்புப் பிழையாகும். குற்றம் புரிந்தவன் மறுபடியும் குற்றம் புகாதவாறு. நானுணர்ச்சி பெருக்குவதே ஒறுப்பின் படிப்பினை என்ற கருத்தால், தலைச் செல்லா வண்ணத்தால் ஒத்தாங்கு ஒறுப்பது என்று தண்டனை நோக்கமும் அளவும் காட்டினார். கடிது ஒச்சி மெல்ல எறிக (562) என ஆட்சியும் அன்பும் ஒருங்கு வேண்டினார்; அச்சுறுத்தி நாண் காத்தார்.