பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/238

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23.4 வள்ளுவம்

படுத்தாமை, அவர்தம் மாசு நம்மேற் படியாமை என்ற இரு கூற்றினையும் ஒப்பக் காவாவிடின், எறும்பூரக் கற்குழியுமே என்றபடி, நம் ஒழுக்கத் தரண் இடிபட்டு விடராகி உருக்குலைந்து குட்டிச் சுவராய் விடும். தெருத்துசி வீட்டுள் வாராதவாறு திரையிட்டுப் போற்றிக் கொள்வது உம், வந்து விழும் துகிக் குப்பையைக் கூட்டி அள்ளி அப்புறப் படுத்துவது உம் அகமுடையார் கடனலவோ? ஒழுக்கம் உடையார் என நாம் நினைக்கும் பலர் மடியர்; அறிவாட்சி யில்லாதவர்: துணிவற்றவர்: ஒழுக்கத்தினும் கேவலம் உயிர்ப்பற்றுடையவர்; வினைசெயல் வகை அறியாதவர்; மனத்திட்பம் இல்லாதவர்; சால்புடையவரேயன்றி ஆண்மையுடை யவர் அல்லர்: பல்லாற்றானும் குழந்தை நிலையினர். பேதைபால் காட்டும் பொறுமையை வன்மையுள் வன்மை (153) என்றும், ‘நிறையுடைமை (154) என்றும் தெரிப்பரேல், ஒழுக்கமாவது ஏமாளித்தன்மையன்று; முழு வன்மை என்பது அறியத் தகும்.

மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாம்தம் தகுதியான் வென்று விடல் (158)

இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நான நன்னயம் செய்து விடல் (314)

என்ற குறள்கள் ஒழுக்க வென்றி காட்டும் நடையன. நம் மாட்டுத் தீயவை செய்தார்க்கு அஞ்சி வழி மொழிந்து நடக்க வேண்டும் என்பது வள்ளுவம் அன்று. தீயரை அடக்க வேண்டும் என்பதுவே வள்ளுவம். மிக்கவை செய்தாரை விட்டுவிடுக’ என்னாது, வென்று விடல்’ என்றும், இன்னா செய்தாரைப் பொறுத்தல்’ என்னாது, ‘ஒறுத்தல் என்றும் பெய்த சொன்னடை சான்றாதல் காண்க. கொடியோர்க்கு அவர்போல் கொடியது செய்தாயினும் வெல்லுக; தண்டிக்க என்பது ஆசான் நெஞ்சம் அன்றுகாண். வெல்லலும் ஒறுத்தலும் ஒழுக்க நெறியாதல் வேண்டும் என வற்புறுத்துவான், தம் தகுதியான் வென்றுவிடல் எனவும், அவர் நான நன்னயம் செய்து விடல் எனவும் நெறியும் பயனும் ஒருசேரக் கூறின்ார். ஆதலின், சால்புடைமையாவது ஏமாறா வாழ்வு நெறி என்பது உம், சிறியோரை உணர்த்தித் திருத்தும் அகப்படை என்பது உம் தெளிவு.