பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/239

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் நடை 235

ஆற்றுவார் ஆற்றல் பணிதல் அதுசான்றோர் மாற்றாரை மாற்றும் படை (985) பணிதல் என்பது கால் வீழ்வன்று; பொய் வணக்கம் அன்று: இகழ்வார்பின் சென்றுநிலை (966) என்றபடி பின்னிற்கும் வால்பிடிப்பன்று; கோழைக் குனிவன்று. மாற்றாரையும் மனித வினம் என எண்ணி, மதிப்பளிக்கும் மக்கட்பண்பே பணிவு எனப் படும். தன் மதிப்பு விடா இப்பணிவு எத்தகைய வன்னெஞ்சையும் இளக்கி உருக்கிக் குழைத்துவிடும். தன் அறிவுடைப் பணிவு எதிரியைத் தனக்குப் பணிக்கும். ஆதலின், ஒழுக்கம் தற்காக்கும் படையும் ஆகும் என்பது வள்ளுவம்.

6. அதிகாரந்தோறும் அறிவு நடையும் பிற நடையும் கொண்ட குறள்கள் இருத்தல் போல், செல் நெறி கொள் நெறி காட்டும் குறள்களும் உள. நடை நோக்கும் நெறி நோக்கும் கொண்டு, திருக்குறள் கற்பீரேல், இதுவரை மறைந்திருந்த ஆசான் உண்மை நெஞ்சங்கள் தோன்றக் காண்பீர். சில குறள்கள் செல்நெறி நடையன; சில கொள்நெறி நடையன.

எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய் நுண்பொருள் காண்பது அறிவு (424)

வேட்பத்தாம் சொல்லிப் பிறர்சொல் பயன்கோடல் மாட்சியின் மாசற்றார் கோள் (646)

நல்லாறு எனினும் கொளல்தீது மேலுலகம்

இல்லெனினும் ஈதலே நன்று (222) இவ்வனைய குறள்கள் இருநெறியும் ஒருங்கு சுட்டும் நடைப்பட்டன.

7. ஒரு குறளை நினைப்பதும் சொல்லுவதும் ஆளுவதும் எங்ஙன்? அங்ஙன் செய்தற்கு உரியவர் யார்? என்றெல்லாம் குறள்தோறும் அறிவோட்டிக் காண்பது நம் கடமை. பொறுத்தல் இறப்பினை என்றும், (152) ஒறுத்தாரை ஒன்றாக வையாரே (155), ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் (156) என்ற குறள்களை எடுத்தாண்டு. என் குற்றத்தைப் பொறுப்பது உன் ஒழுக்கம் எனச் சொல்லும் உரிமை, தீயது செய்தானுக்கு உண்டா ஈத்துவக்கும் இன்பம் அறியார் கொல் (228), ஈதல் இயையாக் கடை சாதல்