பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/243

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் நடை 23.9

இங்ஙன் வெளிப்படையாகப் பொய்ம்மறுப்பும் மெய்ந் நிறுப்பும் ஒருங்கு செய்யும் வள்ளுவர். ஏற்றிய விளக்கால் இருள் மறையுமாப் போலே, உண்மை விளம்புவதன் மூலம் பொய்க்கொள்கை மறையச் செய்வர். தொழில் காரணமாய்ப் புறக்கோலம் அமைவது நல்ல உலகியல். குணங் காட்டவும், கொள்கை காட்டவும் சமயங்களும் அரசியற் கட்சிகளும் புறவடையாளம் மேற்கொள்ப. இஃது யாண்டும் காணப்படும் பொதுவழக்காயினும், இருவகைக் குற்றம் உடைத்து. கொள்கையில்லாதார் ஒரு கோலத்துட் புகுந்து வஞ்சிப்பர். கோலங்கொள்ளாதார் ஒரு கொள்கையிலர் என விலக்கப்படுவர். தீயோர்க்கு நொடிப் பொழுதில் புகலிடமாய், நல்லோர்க்கு அஞ்சும் பழிப்பிடமாய் நிற்றலால், புறவேடத்தை ஒரு மெய்த் தோற்றமாக வள்ளுவர் துணிந்திலர். உலகம் பழித்தது ஒழித்துவிடின், மழித்தலும் நீட்டலுங்கூட இருக்கலாம் என ஒப்பி மொழியாது, மழித்தலும் நீட்டலும் வேண்டா (280) என்று வேடப்பற்றுத் துர உதறினார்.

உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை அற்றே தவத்திற்கு உரு. (261) என்பது குறிப்பு விளக்குநடை, அற்றே தவத்திற்கு உரு என்ற சொல்லாட்சியால், புறவணியும் புறக்குறியும் புற வேடமுமே தவத்தின் மெய்யுரு என மடம்பட்டுத் துணியும் மக்களின் பொய் வழக்கைக் குறிப்பால் அழிப்பர்; தன்னுயிர்ப் பொறையும் பிறவுயிர் நலமுமே தவத்தின் உருவெனல் வேண்டும் எனப் பட்டாங்குக் கூறுவர். குணநலம் சான்றோர் நலனே (982) என்றபடி, கோலவழகு பகராது, குணவழகு வேண்டுவது. வள்ளுவம். புறவடையாளம் மேற்கொள்க; கொள்ளாது இயல்பாகுக. அஃதோர் துணிவுப் பொருளன்று: நம்பும் இடம் அன்று. வேடம் கொண்டர்ருள் நல்லோரும் தீயோரும் உளர். கொள்ளாதாருள்ளும் நல்லவர் தீயர் உளர். எனினும், வேடத் தீயோர் நம்பிக்கையைப் பயன்கொண்டு வாழ்பவர்; நம் அறிவோட்டத்தைத் தடுப்பவர்; நல் வேடத்தார்க்கும் பழிகொண்டு வருபவர். அவம் அதனை அஃதிலார் (தவப்பண்பு இல்லாதவர்) மேற்கொள்வது’ (262) என்பது ஆசான் துணிந்துரை. தாய் தந்தையர் தம்மக்கட்கு அளிக்கும் நன்மை, அவையத்து முந்தி இருப்பச் செயல் (67) என்ற வெளிப்படைக் கூற்றால்,